8வது இடத்தை பிடித்த அதானி எண்டர்பிரைசர்ஸ்.. இனி ஜாலியோ ஜாலி தான்..!

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தியாவின் டாப்-10 பெரிய நிறுவனங்கள் பட்டியில் நுழைந்துள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தகத்தில் , அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஐடிசி நிறுவனத்தை விஞ்சியது டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.

இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் 8 வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 2023 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் இன்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் இன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 128.80 ரூபாய் அல்லது 3.36 சதவீதம் உயர்ந்து 3,961.15 ரூபாய் அளவில் முடிந்தது. இன்றைய வர்த்தகம் முடியும் கடைசிச் சில மணிநேரங்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு புதிய 52 வார உயர்வான 4,015 ரூபாய் அளவீட்டைத் தொட்டது.

வரலாற்று உச்ச விலை

வரலாற்று உச்ச விலை

4,015 ரூபாய் என்பது தான் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையின் வரலாற்று உச்ச விலையாகும். வர்த்தக முடிவின் சந்தை விலையில், அதானி எண்டர்பிரைசஸ் சந்தை மதிப்பு 4,51,571.54 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வார வெள்ளிக்கிழமை முடிவைக் காட்டிலும் சந்தை மதிப்பு 14,683 கோடி ரூபாய் அதிகமாகும்.

21,000 கோடி ரூபாய் உயர்வு

21,000 கோடி ரூபாய் உயர்வு

நவம்பர் 7 ஆம் தேதி பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு குறைந்தது 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் முந்தைய வர்த்தக நாள்-ஐ ஒப்பிடும் போது அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் அதிகரித்திருக்கும்.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவு

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவு

கடந்த வாரம் வர்த்தக முடிவில் அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை மும்பை பங்குச்சந்தையில் 3,832.35 ரூபாய் பங்கு விலையில் 4,36,888.33 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் இருந்தது.

ஐடிசி நிறுவன பங்குகள்

ஐடிசி நிறுவன பங்குகள்

இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் சந்தை மதிப்பீட்டு அளவில் ஐடிசி நிறுவனத்தை முந்தி மிகவும் மதிப்புமிக்க நிறுவன பட்டியலில் 8 வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஐடிசி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

4,38,166.62 கோடி ரூபாய்

4,38,166.62 கோடி ரூபாய்

இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி பங்குகள் 353.45 ரூபாய் அளவில் முடிந்தது, அதிகப்படியாக 356.40 ரூபாய் அளவீட்டைத் தொட்டது. ஆனால் இந்நிறுவனத்தின் இது 52 வார உச்ச விலை 358.40 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போதைய விலையில் சுமார் 4,38,166.62 கோடி ரூபாயாக உள்ளது.

டாப் 10

டாப் 10

இதன் மூலம் இன்றைய வர்த்தக மாற்றத்தில் இந்தியாவில் அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ, அதானி எண்டர்பிரைசர்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+