இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கும் அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குச்சந்தையிலும், தனது முதலீட்டாளர்களின் மதிப்பையும் மேம்படுத்தும் வகையிலும் 4 வருட திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் அதானி குழுமம் திட்டமிட்டப்படி நடந்தால் அதானி என்டர்பிரைசஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
ஆம், அதானி குழுமம் அதன் தலையாய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் கீழ் இயங்கும் பல்வேறு வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் துணை நிறுவனங்களை 2027 முதல் 2031 வரையிலான காலத்தில் பங்குச்சந்தையில் தனித்தனியாக IPO வாயிலாக பட்டியலிட திட்டமிட்டுள்ளது.

தற்போது இதுக்குறித்து வெளியாகியுள்ள தகவல் படி அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் விமான நிலையங்கள், உலோகங்கள், சாலைகள், டேட்டா சென்டர்கள் வர்த்தகத்தின் துணை நிறுவனங்களை தனிதனியாக பட்டியலிட முடிவு செய்துள்ளது.
அதானி குழுமம் 2016-2020 காலத்தில் அதானி டோட்டல் காஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர் போன்ற நிறுவனங்களை பட்டியலிடத்தன் மூலம் பெரும் லாபத்தை பார்த்தது. தற்போது மீண்டும் இதேபோன்ற ஒரு அலையை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய அலை பெரும் வளர்ச்சியை கொண்டுவரும் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் கீழ் விமான நிலையங்களை நிர்வாகம் செய்யும் நிறுவனம் 2027-28 காலக்கட்டத்தில் தற்போதைய EBITDA அளவை காட்டிலும் மூன்று மடங்காக்கும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய நிர்வாகியாக இருக்கும் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 8 விமான நிலையங்கள் உள்ளது. இந்தியாவில் விமான பயணிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த நிறுவனத்தை பட்டியலிடுவது மூலம் பெரும் மதிப்பை பெற முடியும் என தெரிகிறது.
இதை தொடர்ந்து உலோகங்கள் துறையில், அதானி என்டர்பிரைசஸ், வேதாந்தாவிற்கு நாட்டின் இரண்டாவது பெரிய போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறது. இந்த பிரிவு தற்போது காப்பர் மட்டும் அல்லாமல் பல்வேறு உலோகங்களை தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளது. இப்பிரிவை ஐபிஓ வெளியிடும் போது உலோக முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பை உருவாக்கும்.
சாலை பிரிவில் இயங்கி வரும் அதானி ரோட்ஸ் டிரான்ஸ்போர்ட், அதானி என்டர்பிரைசஸின் முழு உரிமை துணை நிறுவனமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் EBITDA ரூ.930 கோடியாக உள்ளது. தற்போது சுமார் 6 சாலை திட்டங்களை முடித்து 7வது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் உள்ளது. மேலும் 2032க்குள் கங்கா எக்ஸ்ப்ரெஸ்வே மற்றும் 7 புதிய திட்டங்களை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதோடு டேட்டா சென்டர் வர்த்தக பிரிவையும் தனியாக பிரித்து பங்குச்சந்தையில் ஐபிஓ வாயிலாக பட்டியலிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி என்டர்பிரைசஸ், புதிய துணை நிறுவனங்களை பட்டியலிடுவதன் மூலம் பங்குதாரர்களுக்கு பெரும் லாபத்தை அளிக்கும். இது குழுமத்தின் விரிவாக்கத்தின் முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications