வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் சரிவு பாதையில் இருந்த காரணத்தால் சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியது. இந்த நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 870 புள்ளிகள் சரிவிலும், நிஃப்டி குறியீடு 229 புள்ளிகள் சரிவிலும் முடிவடைந்தது.
இதன் மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் 52 வார உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான காரே பால்மா II கோலினரிஸ் பிரைவேட் லிமிடெட்ட நிறுவனம் இணைந்துள்ளது புதிதாக ஒரு நிலக்கரி சுரங்கத்தை இயக்கவும், வளர்ச்சி செய்யும் மிகப்பெரிய ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.
நிலக்கரி சுரங்கம்
சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தை இயக்கவும், வளர்ச்சி செய்யவும் மிக முக்கியமான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான காரே பால்மா II கோலினரிஸ் பிரைவேட் லிமிடெட்ட நிறுவன இணைந்து மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் கைப்பற்றியுள்ளது.
நிலக்கரி அமைச்சகம்
மத்திய நிலக்கரி அமைச்சகம் ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தை நிர்வாகம் செய்யவும், இதை இயக்கவும், இதில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை கோராடி பகுதியில் அமைந்திருக்கும் தெர்மல் பவர் பிளான்ட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு அளித்தது.
34 வருட ஒப்பந்தம்
இந்த நிலக்கரி சுரங்கத்தைத் தான் தற்போது கௌதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசர்ஸ் மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் கைப்பற்றியுள்ளது. சுமார் 34 வருடம் காலம் கொண்ட மாபெரும் ஒப்பந்தமாகும்.
553.177 மில்லியன் டன் நிலக்கரி
ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 23.6 மில்லியன் டன் நிலக்கரி ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 553.177 மில்லியன் டன் நிலக்கரி நிலுவையில் உள்ளது.
6 வழி சாலை திட்டம்
இதேவேளையில் அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் கிளை நிறுவனமான அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ராய்பூர் முதல் விசாகப்பட்டினம் முதல் அமைக்கப்பட உள்ள பாடாகுமாரி - கார்கி பகுதியின் NH130 6 வழி சாலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.
மேற்கு வங்காள தேர்தல்
மேலும் தேர்தல் அதிரடியில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தின் பானாகார் முதல் பால்சிட் பகுதியில் NH19 6 வழி சாலை அமைக்கும் திட்டத்தையும் அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் கிளை நிறுவனமான அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
52 வார உச்சம்
இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தை மோசமாக இருக்கும் நேரத்திலும் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4.45 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,150.20 ரூபாயை அடைந்து 52 வார உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications