மும்பை: பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக தொழில் செய்து வரும் அதானி குழுமம் 2025ஆம் நிதியாண்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. 2025 ஆம் நிதியாண்டில் தொழில்களை விரிவுபடுத்த அதானி குழுமம் கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளது.
2024 - 2025 ஆம் நிதியாண்டில் அதானி குழுமம் பெருமளவில் விமான நிலையம் சார்ந்த திட்ட பணிகளுக்காகவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான மூலதனச் செலவினமாக 80,000 கோடி ரூபாயை தயாராக வைத்திருக்கிறது என அதானி குழுமத்தின் துணை நிதி அதிகாரியான சௌரப் ஷா தெரிவித்துள்ளார்.

"2025ஆம் நிதியாண்டில் எங்களது நிறுவனம் 80,000 கோடியை மூலதனச் செலவினமாக எடுத்து வைத்துள்ளது, இதில் பெரும் அளவிலான தொகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கும் விமான நிலையம் சார்ந்த தொழில்களுக்கும் செலவு செய்யப்பட இருக்கிறது" என கூறியுள்ளார்.
அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறது. சூரிய மின் சக்தி திட்டங்கள், காற்றாலை திட்டங்களில் இந்தியாவின் பிரதான நிறுவனமாக உருவெடுப்பதே அதானி குழுமத்தின் இலக்கு. சோலார் பேனல்களை தயாரித்து அதன் மூலம் மின்சாரம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தத் திட்டத்திற்காகவும் விமான நிலையம் சார்ந்த தங்களது திட்டப் பணிகளுக்காகவும் 50,000 கோடி ரூபாயை தயாராக வைத்திருக்கிறது. இதனை அடுத்து சாலை பணிகள், குறிப்பாக கங்கா எக்ஸ்பிரஸ்வே பணிகளுக்காக 12,000 கோடி ரூபாயை செலவிட இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகை மற்ற தொழில்களுக்கு பிரித்து முதலீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதானி நிறுவனம் விரைவில் பிவிசி துறையிலும் கால்பதிக்க உள்ளது. இதற்காக 10,000 கோடி ரூபாய் மூலதனச் செலவினமாக எடுத்து வைத்திருப்பதாக சௌரப் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையத்திற்காக 5,000 கோடி ரூபாயை எடுத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சோலார் மூலம் 10 மெகாவாட் மின் உற்பத்தியையும் காற்றாலைகள் மூலம் 3 மெகாவாட் மின் உற்பத்தி திறனையும் எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதானி குழுமம் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 45 கிகாவாட் மின் உற்பத்தி என்ற திறனை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் நாடு முழுவதும் ஏழு விமான நிலையங்களை செயல்படுத்துவதற்கான குத்தகைகளை எடுத்துள்ளது.
நவிமும்பையில் இந்த நிறுவனம் கிரீன் பீல்ட் விமான நிலையத்தை கட்டமைத்து வருகிறது. இது 2025ஆம் நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications