அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் அதன் டிசம்பர் காலாண்டு முடிவினை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 820 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவெனில், அதானி எண்டர்பிரைசஸ் கடந்த ஆண்டில் 12 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே செப்டம்பர் 2022 காலாண்டில் இந்த நிறுவனம் 460 கோடி ரூபாய் லாபத்தினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
இதற்கிடையில் என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 4.28% அதிகரித்து, 1789.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 1889 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1611.35 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 3.92% அதிகரித்து, 1785.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1889 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1611.30 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4189.55 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1017.10 ரூபாயாகவும் உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் வருவாய்
அதானி குழுமத்தினை சேர்ந்த முன்னணி நிறுவனமான இதன் செயல்பாட்டு வருவாய் விகிதம் என்பது 42% அதிகரித்து, 26,612.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 18,757.9 கோடி ரூபாயாக இருந்தது.
ப்ளூம்பெர்க் நிபுணர்கள், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் லாபம் 582.80 ரூபாயாகவும், இதன் வருவாய் 29,245 ரூபாயாகவும் இருக்கலாம் என மதிப்பிட்டிருந்த நிலையில், அந்த மதிப்பீட்டினையும் தாண்டி லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் வருவாய் சற்று குறைந்துள்ளது.
எபிட்டா விகிதம்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எபிட்டா விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் இருமடங்கு அதிகரித்து, 1968 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் மார்ஜின் விகிதமானது 4.1%ல் இருந்து 6.1% ஆக அதிகரித்துள்ளது.
வளர்ச்வளர்ச்சி அதிகரிக்கும்சி அதிகரிக்கும்
தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் உள்கட்டமைப்பு துறையில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன் வளர்ச்சி விகிதமானது நீண்டகால நோக்கில் வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து அதானி குழுமம் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்து, விரிவாக்கமும் செய்தும் வருகின்றது.
நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்?
இந்த காலாண்டில் அதானி ஏர்போர்ட்ஸ் 20.3 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 40% அதிகரித்துள்ளது. இது 1.8 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
தற்போது சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருந்தாலும், டிசம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சி காணப்பட்டது. அதானி குழுமம் தொடர்ந்து வளர்ச்சியினை விரிவாக்கம் செய்யும் விதமாக அடுத்தடுத்த விரிவாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை அதிகரிக்கலாம்.
ஏற்றத்தில் பங்கு
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டின் மத்தியில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்தது. இதன் தாக்கம் என்பது சந்தையில் இருந்தாலும், இன்று வெளியான வரவு செலவு அறிக்கைக்கு மத்தியில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கானது நல்ல ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. அதோடு இழந்த நம்பிக்கையை மீட்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அதானி தொடர்ந்து எடுத்து வருகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications