இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தைத் திறந்த சில நிமிடத்தில் 10 சதவீதம் சரிந்தது.
இதனால் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு வர்த்தகம் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அதானி குழுமம் தொடர்பாகக் கணக்கியல் மோசடி குற்றச்சாட்டுகள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது.
மொத்தம் 5 நிறுவனங்கள்
அதானி எண்டர்பிரைசஸ் உடன் சேர்ந்து அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனப் பங்குகளும் அவற்றின் trading stops அளவீட்டை எட்டிய காரணத்தால் இன்று காலை அதன் வர்த்தகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
இந்தத் தற்காலிக வர்த்தக நிறுத்தத்திற்குப் பின்பு அதானி எண்டர்பிரைசஸ் மட்டும் மீண்டும் வர்த்தகம் செய்யத் துவங்கப்பட்டது. ஆனால் அடுத்தச் சில நிமிடத்தில் கூடுதலாக 5 சதவீதம் சரிந்து மொத்தம் 15 சதவீதம் சரிவை பதிவு செய்தது, இதானால் மீண்டும் வர்த்தகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானி
இதன் மூலம் இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் கௌதம் அதானி சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது. ஏற்கனவே உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 16வது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில் இன்று 20 இடத்தைத் தாண்டி பன்னுக்கு அனுப்பப்படலாம்.
இன்றைய வர்த்தகச் சரிவு
அதானி எண்டர்பிரைசஸ் - 25.00 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 6.58 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 1.64 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 3.82 சதவீதம் சரிவு
NDTV - 4.98 சதவீதம் சரிவு
தேசிய பங்குச்சந்தை அமைப்பு
தேசிய பங்குச்சந்தை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அதானி குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் பங்கு மதிப்பின் சரிவின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடுமையான நடவடிக்கை இல்லை
இந்த அறிக்கையில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிரான பாதகமான நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது தேசிய பங்குச்சந்தை அமைப்பு.
20000 கோடி ரூபாய் FPO திட்டம்
இந்தியாவின் பெரும் பணக்காரராக ஆக இருந்த கௌதம் அதானி-யின் அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்தைத் திடீரென ரத்து செய்தது குறித்து முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டாலும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
108 பில்லியன் டாலர்
இதன் வாயிலாக ஜனவரி 25 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையிலான 6 நாள் வர்த்தகத்தில் சுமார் 108 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை அதானி குழுமம் இழந்துள்ளது. இன்றைய வர்த்தகச் சரிவை பார்க்கும் போது குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 25 சதவீத சரிவைப் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications