அதானி குழுமத்தினை சேர்ந்த பல நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பங்குகள் கடந்த சில வாரங்களாகவே கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் கடும் அழுத்தத்தினை கண்டு வருகின்றன.
இது ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 7% சரிவினைக் கண்ட நிலையில், முடிவில் ஏற்றம் கண்டது. இது அதன் டே லோவில் இருந்து, 24% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதே முடிவில் 14.27% ஏற்றத்தினை கண்டு, 1363.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 14.27% அதிகரித்து, 1363.85 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1398 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1103.75 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 14.22% அதிகரித்து, 1364.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1421.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1103 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 4189.55 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1017.10 ரூபாயாகவும் உள்ளது.
எது ஏற்றம் & எது சரிவு?
அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி, அதனி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மர், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், என்.டி,டி.வி உள்ளிட்ட பங்குகள் பங்கு சந்தையில் ஏற்றத்தினை கண்டுள்ளன.
அதேசமயம் அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது மீண்டும் லோவர் சர்க்யூட் ஆகி சரிவினைக் கண்டுள்ளன.
முன் கூட்டியே செலுத்த திட்டம்
அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனங்களின் ஏற்றமானது, அதானி குழுமம் 690 - 790 டாலர் தொகையினை மார்ச் 2023ல் திரும்ப செலுத்த முன் கூட்டியே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ஏற்றம் கண்டுள்ளது.
நம்பிக்கையை மீட்க திட்டம்
தொடர்ந்து அதானி குழுமம் அதன் கடன் நிலுவையை முன் கூட்டியே திரும்ப செலுத்துவதன் மூலம், அதன் நம்பிக்கையை மீட்டெடுக்க திட்டமிடுகின்றது.
அதே சமயம் அதானி குழும பங்குகளால் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய பண்டுகள் கடும் சரிவினை கண்டு வருவதாக கூறப்பட்டது.
கவனிக்க வேண்டிய விஷயம்
அதானி குழுமத்தில் போடப்பட்டுள்ள முதலீடுகள் பெரும்பாலும் நிலக்கரி விரிவாக்க பயன்பாட்டிற்கான பயன்படுத்தப்பட்டது. இங்கு போடப்பட்ட முதலீடு பல ஆண்டுகளாகவே ஆபத்தில் இருந்து வருகின்றது. ஆக அதனை அதானி குழுமம் கண்கானிக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.
சொத்து மதிப்பு எவ்வளவு?
இதற்கிடையில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் குறைவாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்கள் கடும் சரிவினைக் கண்டுள்ளன.
துறை முகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார் கெளதம் அதானி. கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர் பட்டியலில் முன்னிலையில் இருந்தவர்ம், சமீபத்திய வாரங்களாக பின்னடைவை சந்தித்து வருகின்றார். அவரின் சொத்து மதிப்பு 39.9 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications