அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்து இருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் செப்டம்பர் மாத மத்தியில் தங்களுக்கு சொந்தமான ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட இருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனை அடுத்து அதானி குழும பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. எனவே அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்வதை நிறுத்தி வைத்தது.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து சரிவடைந்த அதானி குழும பங்குகள் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டன. இந்த நிலையில் தான் அதானி என்டர்பிரைசஸ் மீண்டும் ஈக்விட்டி சந்தையில் நுழைய திட்டமிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக எக்னாமிக் டைம்ஸ்க்கு தகவல் அளித்துள்ள அதானி குழும செய்தி தொடர்பாளர் ஒருவர் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளை ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். முதல் கட்டமாக ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் Qualified Institutional Placement என்ற முறையில் அதாவது பெரிய நிறுவனங்களிடம் பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், ஜெஃப்ரிஸ் ஆகிய நிறுவனங்களுடன் இந்த விற்பனையை முடித்துக் கொடுக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யாத அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களிடம் முதலீட்டைப் பெறுவதே அதானி எண்டர்பிரைசஸ் நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த வாரம் தான் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டியது. பங்குகளை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் முதன்முறையாக பொதுவெளியில் பாண்டுகளை வெளியிட்டு இதன் மூலம் சுமார் 71 மில்லியன் டாலர்களை திரட்ட முடிவுசெய்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications