அதானி குழுமத்தின் தணிக்கையாளர்கள் குறித்த கேள்வியை, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவை மிகச் சிறிய ஒரு நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட்டது.
Recommended Video
இது நான்கு கூட்டாளிகளையும் 11 பணியாளர்களையும் கொண்டுள்ளது மேலும் இந்த தணிக்கை நிறுவனம் மேலும் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை மட்டுமே தணிக்கை செய்கிறது.
அதானி எண்டர்பிரைசஸ் 156 துணை நிறுவனங்களையும், பல கூட்டு நிறுவனங்களையும் கொண்டிருக்கும் நிலையில், தணிக்கை என்பது இன்னும் கடினமாகிறது என்று ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
சிறிய தணிக்கையாளர்
அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தணிக்கையாளர் ஷா தன்தாரியா ஒரு சிறிய நிறுவனமாகும். அதன் வலைத்தளத்தின் ஆவணங்கள், அதில் 4 கூட்டாளர்கள் மற்றும் 11 பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகக் காட்டுகின்றன.
எப்படி தணிக்கை?
ஷா தன்தாரியா மாதாந்திர அலுவலக வாடகையாக சுமார் 32,000 ரூபாய் செலுத்தியதாக பதிவுகள் காட்டுகின்றன. ஷா தன்தாரியா சிக்கலான தணிக்கை வேலைகளில் திறன் கொண்டவராகத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் அதானி எண்டர்பிரைசஸ் மட்டும் 156 துணை நிறுவனங்கள் மற்றும் பல கூட்டு முயற்சிகள் மற்றும் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் அதானி குழுமத்திற்கு எப்படி தணிக்கை செய்ய முடியும் என்ற கேள்வியையும் நிபுணர்கள் எழுப்புகின்றனர்.
பிரெஷ்ஷர்கள்
அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கேஸின் வருடாந்திர தணிக்கைகளில் முறையே கையெழுத்திட்ட, ஷா தன்தாரியாவின் தணிக்கை அதிகாரிகள் தணிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கத் தொடங்கியபோது 24 மற்றும் 23 வயதுடையவர்கள். அவர்கள் அப்போது தான் படித்து முடித்து வெளியே வந்திருப்பார்கள்.
சிறிய நிறுவனங்களுக்கு ஆதரவு
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் எப்படி அதானி குழும நிறுவனங்கள் சிலவற்றை கையாள முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஹிண்டர்ன்பர்க் உள்நாட்டு சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக உருவாக தேவையான அனைத்து ஆதரவையும் பெறுவதை உறுதி செய்வது தங்கள் பொறுப்பு என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
வளர தேவையான நடவடிக்கை
ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு சிறிய கணக்கியல் நிறுவனமான ஷா தன்தாரியா குழுமத்தினை தனது தணிக்கை அறிக்கையில் சேர்த்தது, உள்நாட்டு சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர தேவையான அனைத்து நடவடிக்கையினையும் அதானி குழுமம் செய்கிறது.
அதானியின் கேள்வி?
ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனமாக வளருவதில் பொறுப்பு நமக்கு இல்லையா? ஒரு சிறிய நிறுவனம் பெரியளவிலான நிறுவனமாக வளர்வதற்கு நாம் ஆதரவளித்தால், அது எப்படி மோசமான விஷயமாகும். இது நம்முடைய பொறுப்பு இல்லையா? எங்களிடம் 21,000 சிறு விற்பனையாளர்கள் உள்ளனர் என அதானி குழுமம் கேள்வி எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications