இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் மற்றும் முன்னணி தொழிலதிபருமான கௌதம் அதானி ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு மூலம் பெரிய அளவிலான சொத்து மதிப்பு, நிறுவனத்தின் சந்தை மதிப்பையும் இழந்தாலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளின் வேகம் குறைந்தாலும் நிறுத்தியது இல்லை.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் சொத்து பிரிவு, மும்பையின் குடிசை மறுவாழ்வு ஆணையத்துடன் கூட்டணி இணைந்து மும்பையின் தாராவி பகுதியை மறுவடிவமைக்க செய்யும் பணியில் ஈடுபட உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சேரி பகுதிகளில் ஒன்றான தாராவி பகுதியை மறுவடிவமைப்பு செய்யும் பணியில் பல்வேறு சட்ட சிக்கல் இருக்கும் வேளையில் அதானி குழுமம் இப்பகுதியை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், தாராவி ரீடெவலப்மென்ட் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தை உருவாக்குவதை உறுதிப்படுத்தி உள்ளார். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தாராவி பகுதியை மறுசீரமைப்பு தெய்யும் பணிகள் பல தசாப்தங்களாக தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமம் இக்கூட்டணி நிறுவனத்தை முக்கியமானதாக பார்க்கிறது, காரணம் தாராவி பகுதியை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்தின் ஏலத்தில் துபாயை தளமாகக் கொண்ட செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் தொடுத்துள்ள வழக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படும் வேளையில், அதானி குழுமம் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏல நடைமுறையை முறையற்ற விதத்தில் ரத்து செய்து, அதானி வெற்றிபெறும் வகையில் அதை மறுதொடக்கம் செய்ததாக SecLink குற்றம் சாட்டியுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலஅரசும் அதானியும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து, செக்லிங்கின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியது.

அரசு நடத்தும் தாராவி மறுவடிவமைப்பு ஆணையத்தின் தலைவரான எஸ்.வி.ஆர் ஸ்ரீனிவாஸ், ஆகஸ்ட் மாதம் ராய்ட்டர்ஸ்-க்கு அளித்த பேட்டியில், புதிய 80:20 கூட்டணி நிறுவனம் உருவாக்கப்படும். இதில் 80 சதவீதத்தை அதானி பிராப்பர்டீஸ், 20 சதவீதத்தை மாநில அரசு கொண்டு அமைக்கப்படும். மேலும் இக்கூட்டணி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதானி குழுமத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் கூறினார். இதன் அடிப்படையில் தற்போது Dharavi Redevelopment Project Pvt Ltd நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டமாக அதானி குழுமம் தாராவி பகுதியை மறுசீரமைப்பு செய்ய ஒரு மாஸ்டர் பிளானை சமர்ப்பிக்கும், அதில் உள்கட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் பொது வசதிகள் பற்றிய திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும். அதானி குழுமம் தாராவி புனரமைப்புத் திட்டத்தை ஜூலை மாதம் 610 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications