சென்னை: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அமித் சிங், 2025 மார்ச் 31 ஆம் தேதியுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்தார். ஆனால் அமித் சிங் அதானி குழுமத்தை விட்டு வெளியேறப்போவது இல்லை, இவர் அதானி குழுமத்திற்குள் மற்றொரு முக்கிய நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு தொடர்ந்து அதானி குழுமத்திலேயே பணியாற்ற உள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி-யில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அமித் சிங் அதானி குழுமத்தின் சர்வதேச எனர்ஜி வணிகத்திற்கான சிஇஓ பதவியை ஏற்க உள்ளார். அமித் சிங்-யின் புதிய சிஇஓவாக அஷிஷ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

அஷிஷ் கண்ணா தற்போது சர்வதேச எனர்ஜி வணிக (International Energy Business) பிரிவை வழிநடத்தி வருகிறார். அஷிஷ் கண்ணா 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வார். International Energy Business மற்றும் அதானி கிரீன் எனர்ஜி சிஇஓ-க்கள் இடம் மாறுகின்றனர்.
இந்த தலைமைத்துவ மாற்றம் அதானி குழுமத்தின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும், அதன் பல்வேறு வணிகத் துறைகளில் வலுவான தலைமைதுவத்தை உருவாக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை அனைத்து துறைகளிலும் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்த தலைமைத்துவத்தை மாற்றியமைத்துள்ளது கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம்.
இதேவேளையில் அதானி குழுமம் மற்றொரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதானி குழுமம், தனது முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அதானி வில்மாரில் உள்ள தனது 44% பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, இந்திய தொழில் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி வில்மார் நிறுவனம், இந்தியாவில் FMCG மற்றும் சமையல் எண்ணெய் துறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தில் அதானி குழுமம் மற்றும் வில்மார் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து முதலீடு செய்துள்ளன.
இந்த பங்குகளை விற்பனை செய்யும் முடிவு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, அதானி குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான அதானி கம்மடிட்டிஸ் எல்எல்பி (ACL) வைத்திருக்கும் அதானி வில்மாரின் 31.06% பங்குகள் வரை வில்மார் இன்டர்நேஷனலின் துணை நிறுவனமான லென்ஸ் பிடிஈ லிமிடெட்டுக்கு விற்பனை செய்யப்படும்.
இந்திய பங்குச் சந்தை விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவு பங்குகளை பொதுமக்களிடம் விற்க வேண்டும். இந்த விதிமுறையை பூர்த்தி செய்ய, அதானி குழுமம் அதானி வில்மாரில் உள்ள தனது மீதமுள்ள 13% பங்குகளை பொதுச் சந்தையில் விற்பனை செய்யும்.
இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதானி குழுமம் தனது முதலீடுகளை வேறு துறைகளில் செலுத்த விரும்பலாம் அல்லது பிற நிதித் தேவைகளுக்காக இந்த பணத்தை பயன்படுத்தலாம்.
இந்த முடிவு, அதானி வில்மார் நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் இந்திய FMCG துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வில்மார் இன்டர்நேஷனல், அதானி வில்மாரை எவ்வாறு நிர்வகிக்கும்? இந்திய சந்தையில் அதானி வில்மாரின் போட்டித்திறன் எவ்வாறு பாதிக்கப்படும்? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications