கௌதம் அதானி ஆட்டம் இனிதே ஆரம்பம்.. புதுசா 2 நிறுவனம், பீகாரில் ரூ.8,700 கோடி முதலீடு..!!

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் புதிதாக இரண்டு துணை நிறுவனங்களைத் துவங்கியுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அதானி சௌர் உர்ஜா (கேஏ) லிமிடெட் அதன் கீழ் அதானி ரினியூவபிள் எனர்ஜி ஃபிப்டி ஒன் (51) லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனத்தையும், அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் நைன் லிமிடெட் என்ற மற்றொரு கிளை நிறுவனம் அதானி ரினியூவபிள் எனர்ஜி ஃபிப்டி ஃபை (55) லிமிடெட் என்ற இரு துணை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

கௌதம் அதானி ஆட்டம் இனிதே ஆரம்பம்.. புதுசா 2 நிறுவனம், பீகாரில் ரூ.8,700 கோடி முதலீடு..!!

அதானி ரினியூவபிள் எனர்ஜி ஃபிப்டி ஒன் லிமிடெட், அதானி ரினியூவபிள் எனர்ஜி ஃபிப்டி ஃபை லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் எவ்விதமான கூட்டணியும் இல்லாமல் 100 சதவீத பங்கு உரிமை கொண்ட நிறுவனமாகும்.

இந்தப் புதிய 2 துணை நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைப் பயன்படுத்தி, குறிப்பாகக் காற்றாலை மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. தற்போது, இவ்விரு நிறுவனங்களும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன, இன்னும் செயல்படத் தொடங்கவில்லை எனவும் முதலீட்டாளர்களுக்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதானி குழுமம் பீகாரில் இதுவரை செய்த முதலீடுகளைத் தாண்டி புதிதாகப் பல துறைகளில் சுமார் 8,700 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநர் பிரணவ் அதானி, கௌதம் அதானியின் இளைய மகன் இன்று தெரிவித்தார்.

அதானி குழுமம் ஏற்கனவே பீகாரில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் எரிவாயு விநியோகத் துறைகளில் 850 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இதன் வாயிலாகச் சுமார் 3,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி - ஹிண்டனர்பர்க் வழக்கில் தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் விவகாரம் குறித்த விசாரணையில் ஒரு சில ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பி இந்த வழக்கில் செபி அமைப்பின் விசாரணையை நீதிமன்றம் சந்தேகிக்க முடியாது என்று கூறியது.

இதன் பின்பு கௌதம் அதானி விற்கத் திட்டமிட்டு இருந்த பல முடிவுகளைத் திரும்பப்பெற்றது மட்டும் அல்லாமல் பல துறையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார். அதானி குழுமம் அடுத்த 10 வருடத்தில் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் பழைய கௌதம் அதானி-யை எல்லோரும் பார்க்கப் போகிறோம்.

பங்கு முதலீட்டாளர்கள் பணத்தை ரெடி பண்ணிக்கோங்க, அதானி குழுமம் பெரிய அளவில் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது மிஸ் பண்ணிடாதீங்க.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+