மாபெரும் நிதி நெருக்கடியில் சிக்கி பல நாடுகள், அமைப்புகள் உதவிகள் காரணமாக மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை பொருளாதாரம், வளர்ச்சிக்கான பாதையை வகுத்து வருகிறது. இதற்கு முதல்கட்டமாக இலங்கையில் போதுமான எரிசக்தியை உருவாக்குவதில் அதிகப்படியான கவனத்தை தெலுத்தி வருகிறது, இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இலங்கை அரசு முக்கியமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை திவாலாக அறிவித்த பின்பு முதன் முதலில் மிகப்பெரிய அன்னிய முதலீட்டு திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கிய அதானி குழுமம் தற்போது அதீத கடன் மற்றும் கணக்கியல் மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அரசு அதானி குழுமத்திற்கு அளிப்பதாக ஏற்கனவே ஒப்புதல் அளித்த 442 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை
இலங்கை அரசின் முதலீட்டு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி நிர்வாகம் செய்யும் அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி இலங்கையின் மேற்கு பகுதியில் இரண்டு காற்றாலை தீவுகளை அமைக்கும் 442 மில்லியன் டாலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
இந்த திட்டத்தின் கீழ் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இரு காற்றாலை கட்டமைப்பில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் இலங்கை தேசிய மின்சார் வலைஅமைப்பிற்கு மின்சாரத்தை சப்ளை செய்யும் என இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்துள்ளது. திவாலானதாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசு ஏற்கனவே அதானி குழுமத்திற்கு 2021ல் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான கொழும்பு துறைமுக திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
442 மில்லியன் டாலர்
இதை தொடர்ந்து தற்போது 442 மில்லியன் டாலர் காற்றலை திட்டமும் ஒப்புதல் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் சீன முதலீடுகள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் அதன் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனிடையில் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் இந்தியா அரசு மற்றும் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் கணிசமாக உயரும், இந்திய - சீனா எல்லையில் பதற்ற நிலை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் சீன ஆதிக்கத்தை குறைக்கும் வழியாக இதை பார்க்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக திட்டம்
மேலும் இந்த இரு திட்டங்களுக்கு இந்திய அரசு தரப்பில் அதானி குழுமத்தை நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொழும்பு துறைமுக திட்டத்தில் அதானி குழுமம் 1.4 கிலோமீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்ட ஜெட்டி கட்டப்படுகிறது. இது கொழும்புவில் சீன கட்டிய துறைமுகத்திற்கும் அருகில் வர உள்ளது. இது துபாய் மற்றும் சிங்கப்பூர் மத்தியில் இருக்கும் ஓரே ஓரு deep-sea container துறைமுகம் என்பது கூடுதல் சிறப்பு.
காஞ்சன விஜேசேகர
காற்றாலை திட்டத்தை இறுதி செய்ய அதானி குழும அதிகாரிகளை கொழும்பில் புதன்கிழமை சந்தித்ததாக இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications