Adani Green Energy: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமம் கடந்த 3 மாதங்களாக அதிகப்படியான நெருக்கடிகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை எதிரொலியாக சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தையில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வந்த அதானி குழும பங்குகள் கடந்த 3 மாதம் மிகப்பெரிய ரோலர்கோஸ்டர் பயணமாக மாறியது என்றால் மிகையில்லை.
சமீபத்தில் அதானி குழுமம் 2.15 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பி செலுத்தியுள்ளது பொய் என தி கென் வெளியிட்ட அறிக்கை மூலம் பெரும் சர்ச்சை ஆனது, இதை அதானி குழுமம் மொத்தமாக மறுத்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் இதுக்குறித்த கேள்வியும் சந்தேகமும் தொடர்ந்து இருந்து வருகிறது, இதற்கான விளக்கத்தை அதானி குழுமம் தனது காலாண்டு முடிவுகளில் அறிவிக்கும் என ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அதானி குழுமம் முதலீட்டாளர்கள் இதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதானி குழுமம் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது, இதற்காக அமெரிக்காவில் இன்வெஸ்டார் ரோடுஷோ நடத்தி வருகிறது. இந்த ரோடுஷோ-வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல முன்னணி தனியார் முதலீட்டு நிறுவனங்களை அதானி குழும உயர் அதிகாரிகள் அனுகியுள்ளது.
ஆனால் அதானி குழுமம் மீது பங்கு விலை செயற்கையாக உயர்த்தியது, மறைமுகமாக கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானி இக்குழுமத்தின் பங்குகளை வைத்திருப்பது, இதை பல வகையில் மறைத்திருப்பது என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக்கும் காரணத்தால் முதலீடுகளை பெறுவதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கு மத்தியில் தேசிய பங்குச்சந்தை மற்றும் பாம்மே பங்குச்சந்தை வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அதானி குழுமத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தை முதல் கட்ட long-term additional surveillance measure framework-ல் வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மார்ச் 28 ஆம் தேதி தான் பங்குசந்தைகள் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தை 2ஆம் கட்ட ASM ப்ரேம்வொர்க் கீழ் வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது தேசிய பங்குச்சந்தை மற்றும் பாம்பே பங்குச்சந்தைகள் தனித்தனி அறிக்கையில் வருகிற 10 ஆம் தேதி முதல் முதல் கட்ட நீண்ட கால ASM ப்ரேம்வொர்க் கீழ் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக இரு பங்குச்சந்தைகளும் பார்ப்பது ஹைய் லோ வெரியேஷன், கிளையின்ட் கான்சென்ட்ரேஷன், விலை தடுமாற்றம், க்ளோஸ் டூ க்ளோஸ் விலை மாற்றம் போன்றயாகும்.
வெள்ளிக்கிழமை புனித வெள்ளி காரணமாக இந்திய பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் உலகின் முக்கிய வர்த்தக சந்தைகள் அனைத்தும் விடுமுறை அறிவிக்க்பபட்ட நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் 10 நிறுவன பங்குகளும் லாபத்துடன் முடிவடைந்துள்ளது.

அதிலும் முக்கியமாக அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், NDTV ஆகியவை 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதோடு பல பங்குகள் அப்பர் சர்கியூட் அளவீட்டையும் தொட்டு உள்ளது. மேலும் அதானி குழுமம் அமெரிக்காவில் நடத்தும் இன்வெஸ்டார் ரோடுஷோ-வில் இதுவரையில் எவ்விதமான வெற்றியும் கிடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications