அதானி க்ரீன் எனர்ஜி என்கிற பெயரில் மரபுசாரா எரிசக்தியைத் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கெளதம் அதானியின் அதானி குழுமத்தைச் சேர்ந்தது.
இந்த நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது.
ஆனால் கடந்த 2018 ஜூலை செப்டம்பர் காலத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் -187 கோடியாக இருந்தது. அதாவது 187 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது.
வருவாய்
இந்த 2019 - 20 நிதி ஆண்டில், இரண்டாவது காலாண்டில், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 53.5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். ஆக வருமானம் 689 கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. முந்தைய 2018 - 19 நிதி ஆண்டில், இரண்டாவது காலாண்டில், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் வருவாய் 449 கோடி ரூபாயாக இருந்ததாம்.
எபிட்டா
அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் எபிட்டா (Earnings before interest, tax, depreciation and amortisation - EBITDA) 94.4 சதவிகிதம் அதிகரித்து 382 கோடியாக இருக்கிறதாம். இது கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 196 கோடி ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. எபிட்டா தொகை மட்டுமல்ல, எபிட்டா மார்ஜினும் 55.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். முந்தைய ஆண்டில் எபிட்டா மார்ஜின் 43.8 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாம்.
மின்சார உற்பத்தி
இந்த காலாண்டில் மட்டும், மின்சார தயாரிப்பினால் வரும் வருமானம் 3 சதவிகிதம் அதிகரித்து 462 கோடியத் தொட்டு இருக்கிறதாம். இந்த காலாண்டில் மொத்தம் 970 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறதாம்.. இது கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாசிட்டிவ் செய்திகளால், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவன பங்குகளின் விலை வரலாற்று உச்சமான 99 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
200% லாபம்
கடந்த பிப்ரவரி 19, 2019-ல் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy limited) நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால் இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 99 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக சுமார் 9 மாத காலத்துக்குள், இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 200 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.
100% லாபம்
பிப்ரவரியில் இருந்து எல்லாம் இந்த பங்கு கண்ணில் படவில்லையா..? சரி, கடந்த செப்டம்பர் 05, 2019, வியாழக்கிழமை அன்று இதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 45 ரூபாய் தான். அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று 99 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 100 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதற்கும் கொடுத்து வைக்கவில்லையா..? மேற்கொண்டு படியுங்கள்.
75% லாபம்
இந்த செப்டம்பர் மாத கதை கூட ஒத்து வராதவர்கள், அக்டோபர் மாதத்தில் மட்டுமாவது கவனம் செலுத்தி வாங்கி இருந்தால் கூட ஒரு நல்ல லாபம் பார்த்து இருக்கலாம். சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த அக்டோபர் 01, 2019 அன்று இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகளின் விலை 56 ரூபாய் தான். ஆக அன்று வாங்கி இருந்தால் கூட இன்று 99 ரூபாய்க்கு விற்று வெளியேறி சுமார் 75 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications