உலக நாடுகள் தற்போது கிளீன் எனர்ஜி மீது அதிகளவில் ஆர்வம் காட்டப்படும் நிலையில் இந்தியாவில் சுற்றுச்சுழல் மாசுபாட்டைத் தடுக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இதேவேளையில் கிளீன் எனர்ஜி பிரிவில் பல நிறுவனங்கள் தற்போது உருவாக்கியுள்ளது.
இதில் முன்னோடியாக இருக்கும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை சிறப்புச் செய்தியாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் புதிய உச்சத்தை அடைந்துள்ள காரணத்தால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
அமெரிக்காவிற்குப் பறந்த சேர்சாட்.. டிக்டாக் உடன் போட்டியா..?!

காலாண்டு முடிவில் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் 82 சதவீத சரிவடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்வில் உள்ளது.
2019ஆம் ஆண்டுச் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் சுமார் 102.29 கோடி ரூபாய் லாபம் அடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 17.57 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே அடைந்துள்ளது.

தொடர் வளர்ச்சி
இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் சரிந்திருந்தாலும் கடந்த ஒரு வாரத்தில் 17 சதவீதமும், கடந்த 3 நாட்களில் 15.03 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் ஜனவரி 1 2020ல் வெறும் 174.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் இன்று 989 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

புதிய உச்சம்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் 5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து அதிகப்படியாக 989.45 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
வர்த்தக முடிவில் இன்று பங்குகள் 4.95 சதவீத வளர்ச்சியுடன் 989.00 ரூபாய் விலைக்கு முடிவடைந்துள்ளது.

அதிரடி வளர்ச்சி
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 926.47 சதவீத வளர்ச்சியும், 2020ல் 492 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

45,000 கோடி ரூபாய் டீல்
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் Solar Energy Corporation of India அமைப்பிடம் இருந்து சுமார் 8GW அளவிலான சோலார் உற்பத்தி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர், கிட்டதட்ட 45,000 கோடி ரூபாய்.