இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளது கௌதம் அதானியின் அதானி குழுமம் சமீபத்தில் அதிகப்படியான கடன் பெற்றுள்ளதாகவும், இது ஆபத்தானது என முன்னணி ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளது.
இது முதலீட்டாளர்களுக்குப் பெரிய அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அதானி குழுமத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதானி கிரீன் நிறுவனத்தின் கீழ் 3 புதிய நிறுவனங்களை உருவாக்கி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளார் கௌதம் அதானி.
கௌதம் அதானி உருவாக்கிய 3 புதிய நிறுவனத்தின் பெயர்கள் வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது..?!
அதானி குழுமம்
அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குக் கீழ் பல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் போர் லிமிடெட். இந்த நிறுவனத்தின் கீழ் தான் தற்போது 3 புதிய கிளை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
இதுகுறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் போர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் 3 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
காற்றாலை, சோலார், ரினியூவபிள் எனர்ஜி
இந்த 3 நிறுவனங்களின் அடிப்படை பணி காற்றாலை, சோலார் மற்றும் இதர ரினியூவபிள் எனர்ஜி மூலம் பவர் அல்லது மின்சாரத்தை உற்பத்தி, டெவலப், மாற்றம், விநியோகம், டிரான்ஸ்மிட், விற்பனை, சப்ளை ஆகியவற்றைச் செய்ய உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 புதிய நிறுவனங்கள்
இந்நிலையில் இந்த 3 புதிய நிறுவனங்களின் பெயர்களைப் பாருங்க Adani Renewable Energy Thirty Six, Adani Renewable Energy Forty Limited, Adani Renewable Energy Forty Seven Limited. 36, 40, 47 என எண்களுடன் நிறுவனங்களின் பெயர் உருக்கப்பட்டு உள்ளது வித்தியாசமாக உள்ளது.
அக்டோபர் 3
மேலும் இந்த 3 நிறுவனங்களும் அக்டோபர் 3 ஆம் தேதி குஜராத் அகமதாபாத்-ல் புதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைத் துவங்க உள்ளது. அதானி கிரீன் பங்குகள் இன்று 1.42 சதவீதம் சரிந்து 2047.15 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications