அதானி குழுமம் பற்றி அமெரிக்க ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பின்பு 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்து தற்போது வெறும் 7.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளது.
இந்தத் தொடர் சரிவை சமாளிக்க அதானி குழுமம் பல முயற்சி செய்து வரும் வேளையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை எப்படியாவது பெர வேண்டும் என்பதற்காக ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் அதானி குழும அளவுக்கு அதிகமாகக் கடன் வைத்திருப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கடன் அளவை குறைந்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் இறங்கியது, இதன் மூலம் ஜனவரி மாதம் முதல் பல கடன்களை அடைத்துள்ளது அதானி குழுமம் எப்படி எவ்வளவு கடனை அடைந்துள்ளது தெரியுமா..?
அதானி குழுமம்
அதானி குழுமம் ஜனவரி 24 ஆம் தேதி முதல் அதாவது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து இதுவரையில் 1.114 பில்லியன் டாலர் அதாவது 9200 கோடி ரூபாய் கடனை அடைந்துள்ளது. அதானி குழுமம் தனது நிறுவன பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியிருந்தது, தற்போது இந்நிறுவன பங்குகள் 80 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் முதல்கட்டமாக இந்தக் கடன்களை அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாகவே செலுத்தியுள்ளது.
எஸ்பிஐ, ஆதித்யா பிர்லா
இதில் முக்கியமாக அதானி குழுமம் இந்த வார துவக்கத்தில் SBI மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாயும், ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாயும் முதிர்ச்சியடைந்த தனது கமர்சியல் பேப்பர் கடன்களுக்குத் திருப்பிச் செலுத்தியுள்ளது.
மொத்த கடன்
ஆனால் அதானி குழுமம் ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான கடனுக்குப் பேமெண்ட் செலுத்த வேண்டும். இதேபோல் செப்டம்பர் 30 வரையில் அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு 24.1 பில்லியன் டாலர், ஆனால் அதானி குழுமம் ஜனவரி 24 ஆம் தேதி முதல் இன்று வரையில் 1.114 பில்லியன் டாலர் கடனை மட்டுமே திரும்பி செலுத்தியுள்ளது.
உபரி நிதி
இந்தக் கடன் அனைத்தையும் அதானி குழுமம் தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்தில் இருந்தும், வர்த்தகத்தில் இருந்து வந்த வருமானத்தைக் கொண்டு செலுத்தியுள்ளது. இதனால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உபரி நிதி இல்லாமல் போகும் வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது. ஆனாலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக மட்டுமே இதைச் செய்து வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் உண்மையான செயல்திறன் மார்ச் காலாண்டு முடிவில் தெரியும்.
நிதி ஆதாரம்
இதேவேளையில் அதானி குழுமத்திடம் போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது, டிசம்பர் காலாண்டில் அதானி குழுமத்திடம் 31,646 கோடி ரூபாய் நிதி ஆதாரங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதானி குழும பங்குகள் விலை
அதானி எண்டர்பிரைசஸ் - 4.98 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 1.24 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.98 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 4.96 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 3.35 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 0.03 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 2.45 சதவீதம் உயர்வு
NDTV - 4.05 சதவீதம் சரிவு
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications