இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான, தொழிலதிபருமான கெளதம் அதானி ராஜஸ்தானில், 65,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில மாநிலங்களில் தனது முதலீட்டினை அறிவித்துள்ள கெளதம் அதானி, இந்த முறை ராஜஸ்தானில் மீண்டும் தனது முதலீட்டு திட்டத்தினை அறிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கையில் ராஜஸ்தானில் 10,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் உற்பத்தி மையம் அமைக்க அடுத்த 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகளில் 65,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் முதலீடு
ஏற்கனவே 35,000 கோடி ரூபாயினை ராஜஸ்தானில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யதுள்ளது. இந்த நிலையில் தற்போது புதுபிக்கத்தக்க ஆற்றலில் தனது முதலீட்டினை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு புதுபிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்தும் விதமாக 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 10,000 மெகவாட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
40,000 பேருக்கு வேலை
சமீபத்தில் தான் ராஜஸ்தானில் உலகின் மிகப்பெரிய காற்றாலை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர சூரிய கலப்பின மின் உற்பத்தி நிலையத்திற்கான வணிக செயல்பாட்டு மையமும் சில வாரங்களுக்கு முன்பு தான் உருவாக்கப்பட்டது.
ஆக மொத்தத்தில் அடுத்த 5 - 7 ஆண்டுகளில் ராஜஸ்தானில் 65,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 40,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என அதானி கூறியுள்ளார்.
சிமெண்ட் துறையில் விரிவாக்கம்
இது தவிர அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட்டினை கையகப்படுத்தியுள்ள அதானி, அதன் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். ஏற்கனவே அதானியின் வசம் 3 சிமெண்ட் ஆலைகள் உள்ள நிலையில், 7,000 கோடி ரூபாய் முதலீட்டினை விரிவாக்க பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. இது ராஜஸ்தானின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என அதானி தெரிவித்துள்ளார். இது தவிர ஜெய்ப்பூர் விமான நிலையத்தினை விரிவுபடுத்தவும் முயற்சியினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விரிவாக்க திட்டம்
அதானியின் முதலீட்டு திட்டத்தில் எரிவாயு மட்டும் அல்ல, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆட்டோமொபைல் துறை, குழாய் மூலமாக எரிவாயு வழங்கல் என பல வகையிலும் மேம்படுத்தப்படும் என ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications