அதானி குழுமம் எப்படியேனும் இழந்த நம்பிக்கையை மீட்டு விட மாட்டோமா? என்ற நிலையில், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக ஹிண்டர்ன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, ஒரு இணையதளம் கூட இல்லாத அனுபவம் என்பது பெரியளவில் இல்லாத இளைஞர்கள் வைத்து வரவு செலவு கணக்கு என்பதை சில நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டினை முன் வைத்தது.
ஆக இதனை தெளிவுப்படுத்தும் விதமாக, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதானி குழுமம், அதானி குழுமத்தின் அறிக்கைகளை சரிபார்க்க கிராண்ட் தோர்டன் என்ற நிறுவனத்தினை நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது உண்மையல்ல என அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஹிண்டர்ன்பர்க்கிற்கு சவால்
இது ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைக்கு சவால் விடும் நோக்கில் கொடுக்கப்பட்டுள்ளது எனலாம். கடந்த ஜனவரி 24 அன்று அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் ஆய்வு குழுமம் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
அதில் குறிப்பாக வரவு செலவு அறிக்கையில் மோசடியாக கணக்கு காட்டியும், வரி ஏய்ப்பும், போலியான நிறுவனங்கள் பெயரில் வரவு செலவு செய்ததாகவும், இதன் மூலம் அதன் வரவு செலவினை உயர்த்திக் காட்டி, அதானி குழும பங்குகள் ஏற்றத்திற்கு வழிவகுத்ததாகவும் குற்றம் சாட்டியது.
பாதியாக குறைந்த மதிப்பு
இந்த அறிக்கையானது வெளியான நிலையில் அதானி குழும பங்குகள் பலவும் தரை தட்டின எனலாம். தொடர்ந்து பல பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. ஹிண்டர்ன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் மதிப்பானது சுமார் 120 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. இது வெறும் 3 வாரங்களில் நிகழ்ந்துள்ளது, முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை சரிவு
அதோடு அதானி குழுமத்தின் மீதான மதிப்பினை பல்வேறு தர குறியீட்டு நிறுவனங்களும், மதிப்பீட்டினை குறைத்து வருகின்றன. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு பிரச்சனையாக மாறியுள்ளது எனலாம். இது மட்டும் அல்ல அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் விதமாக MSCI-யும் தனது இன்டெக்ஸினை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படி அடுத்த சிக்கல்களை எதிர்கொண்டு வரும் அதானி, இந்தியாவிலும் செபியின் கண்கானிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் தானே பிரச்சனை
இப்படி அடுத்த சிக்கல்களுக்கு ஆளாகி வரும் அதானி குழுமம், எங்களது தணிக்கை அறிக்கையில் தானே பிரச்சனை என கூறினீர்கள். இதோ சர்வதேச நிறுவனமான கிராண்ட் தோர்டனிம் எங்களது அறிக்கையை சமர்பிக்க உள்ளோம். சுயமாக எங்களது அறிக்கையினை ஆய்வு செய்ய உள்ளோம் என அதானி குழுமம் கூறுவதாகவும், அவர்கள் இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்வார்கள் எனும் விதமாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. .
என்ன மாற்றம்?
கிராண்ட் தோர்டன் நிறுவனமும் அதானி குழுமத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது ரகசியமான ஒன்றாகவும் உள்ளதாகவும், ஆக இதனை யார் மீண்டும் ஆய்வு செய்யப்போகிறார்கள் என்பது குறித்தான தகவல்களும் வெளியாகவில்லை. ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையும், அதானி குழும அறிக்கையும் எந்தளவுக்கு மாறுபட்டுள்ளது. இது எந்தளவுக்கு சரியாக உள்ளது என்பதை கிராண்ட் தோர்டன் ஆய்வறிக்கையில் தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.
நம்பிக்கை இருக்கு?
எனினும் அதானி குழுமமோ, கிராண்ட் தோடர்னோ இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.
எனினும் அதானி குழுமம் தொடர்ந்து வலுவாக உள்ளது, வலுவான பணப்புழக்கம் என்பது உள்ளது. எங்களது வணிக நடவடிக்கை என்பது சிறப்பாக உள்ளது. ஆக பங்குதாரர்களுக்கு, சிறப்பானதொரு வருமானத்தை கொடுக்க முடியும். எங்களது திறனில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளது.
பயன் என்ன?
அதே சமயம் அதானி குழுமத்தில் வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகள் ஏராளம் உள்ளதாக ஹிண்டர்ன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. ஆக இந்த சுயாதீனமான அறிக்கையில் என்ன தெரியவரும். இதன் மூலம அதானி இழந்த தனது குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்குமா? இது எந்தளவுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications