அதானி குழுமத்தின் பசுமை எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மாற்று எரிசக்தி சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்காவினை கட்டமைத்து வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்து தற்போது மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலை தடுக்கவும், அதிகளவிலான கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகமே இத்தகைய மாற்று எரிசக்திகளை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் மின்சார உற்பத்தியில் சோலார் பேனல்களை பயன்படுத்தி சூரிய சக்தி ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிப்பது சிறந்த வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
551 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்: இந்தியாவை பொறுத்துவரை அதானி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் கால்பதித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் சார்பாக குஜராத் மாநிலம் காவ்டாவில் 551 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இதில் வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தேசிய தொகுப்புக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 மாதங்களில் தயாரான சோலார் பூங்கா: குஜராத் கச் பகுதியின் சவாலான நிலப்பரப்பில் அடிப்படை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, சாலைகள் அமைத்து, மின் உற்பத்திக்கான பேனல்களை நிறுவி மின் உற்பத்தி மற்றும் மனிதர்கள் வேலை செய்வதற்கான சூழல்களை 12 மாதங்களுக்குள் உருவாக்கி வெற்றி அடைந்திருப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா இது என அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
5 ஆண்டுகளில் 30 கிகாவாட் மின் உற்பத்தி: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவில் 30 கிகாவாட் மின் உற்பத்தி செய்வதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இது நிறைவேறினால் உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவாக காவ்டா பூங்கா இருக்கும். இங்கே உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் ஆண்டுக்கு 16.1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.
கவுதம் அதானி பெருமிதம்: இது தொடர்பாக பேசிய அதானி குழும தலைவர் கவுதம் அதானி, தங்களின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சூரிய மற்றும் காற்றாலைக்கான உலகின் மிக விரிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சூழல் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
காவ்டா பூங்கா போன்ற புதுமையான மற்றும் துணிச்சலான திட்டங்கள் மூலம் புது சாதனை படைக்கப்பட்டிருப்பதாகவும், உலகளவிலான தரத்தில் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு இது ஊக்கமளிப்பதாகவும் கூறினார்.
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் உயர்வு: 2030க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் மற்றும் கார்பன் நடுநிலை ஆகிய லட்சிய இலக்குகளை நோக்கி இந்தியாவின் பயணத்தை துரிதப்படுத்துவதில் அதானி குழுமத்தின் உறுதிப்பாடு மற்றும் பங்கினை உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார்.
குஜராத்தின் இந்த பகுதி சிறந்த காற்று மற்றும் சூரிய சக்தி வளங்களை கொண்டது, இது மிகப்பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்கு ஏற்றது என்றார். காவ்டா பூங்காவில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டதை அடுத்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications