புனேயில் வாகேரெ பகுதியில் இருந்த ஃபினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 25 ஏக்கர் நிலத்தை ரூ.470 கோடிக்கு அதானி குழுமம் விலைக்கு வாங்கியுள்ளது.
அதானி குழுமத்தின் துணை நிறுவனம் டெர்ரா விஸ்டா என்னும் ரியல் எஸ்டேட் டெவலப்பர். ஃபினோலக்ஸ் நிலத்தை வாங்கியுள்ள டெர்ரா விஸ்டா அந்த நிலத்தில் ஒரு டேட்டா சென்டரை அமைக்க உள்ளது.

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் வழங்குநரான எட்ஜ் கான்னெக்ஸும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி இரண்டும் சேர்ந்து இந்தியாவில் டேட்டா சென்டர்களை இயக்கி வருகின்றன.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில், அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், இந்தியா முழுவதும் டேட்டா சென்டர்களை உருவாக்கி இயக்குவதற்காக எட்ஜ் கான்னெக்ஸ் உடன் 50:50 என்ற பார்ட்னர்ஷிப்பில் இறங்கியது.
இதைத் தொடர்ந்து எட்ஜ் கான்னெக்ஸ் உடன் இணைந்து இந்தியா முழுவதும் டேட்டா சென்டர்களை உருவாக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
சென்னை, நவி மும்பை, நொய்டா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் மார்க்கெட்களில் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டர்களின் நெட்வொர்க்கை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
அதானி- கான்னக்ஸ் இந்தியா முழுவதும் அமைந்துள்ள எட்ஜ் டேட்டா சென்டர்களின் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறது.
இது டேட்டா சென்டரின் அதிக தேவையை பூர்த்தி செய்யும். இந்த எட்ஜ் தளங்கள், தேவைக்கேற்ப எளிதாக அளவிடுவதற்கும், முழு அளவிலான டேட்டா சென்டர் வளாகங்களாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.
பிம்ப்ரி இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் அமைந்துள்ள ஃபினோலக்ஸ் இடத்தை டெர்ரா விஸ்டா வாங்கியதற்கான விற்பனை பத்திரம் ஏப்ரல் 23 ஆம் தேதி பதிவாகியுள்ளது.
இந்த இடத்தை மகாராஷ்டிரா இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பொரேஷன் பிவிசி பைப் உற்பத்தியாளருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இடத்தின் மொத்தப் பரப்பளவு 25.27 ஏக்கர் ஆகும். முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.23.52 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்வதற்கு ஃபினோலக்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் புனேயில் ஒரு கமர்ஷியல் நிலத்தை ஃபினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸிடமிருந்து மைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் ரூ.328.84 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
இந்த கமர்ஷியல் பிளாட் புனேயின் பிம்ப்ரி வாகரே பகுதியில் அமைந்துள்ளது. இதன் குத்தகையை மாற்றி விடுவதற்காக ஃபினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு ரூ.328.84 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications