மும்பை: சீனாவை மிஞ்சும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டமும் உள்ளது.
அதானி குழுமத்தின் கீழ் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சாட்டிலைட் நவி மும்பையில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. மும்பையில் இப்போது உள்ள விமான நிலையம்
82 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டதாகும்.

மும்பையின் மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த விமான நிலையத்துக்கு துணையாக இந்த நவி மும்பை விமான நிலையம் அமைய உள்ளது. மும்பை விமான நிலையத்தின் தென்கிழக்கே சுமார் 22 மைல் தொலைவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கு அங்குள்ள சிறிய மலைக்குன்றுகளை தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.
இந்தியாவின் தேசிய மலரைப் போலவே தாமரை வடிவமைப்பை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. தாமரை மோடியின் பாஜக கட்சியின் சின்னமும் ஆகும்.
இந்தப் புதிய விமான நிலையம், ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும். , 2032 ஆம் ஆண்டுக்குள் அது 90 மில்லியனாக உயரும்.

துபாய், லண்டன், பிராங்ஃபர்ட், சிங்கப்பூர் போன்ற உலகின் பரபரப்பான சில விமான நிலையங்களுக்கு இணையாக சர்வதேச போக்குவரத்து மையமாக நவி மும்பை விமான நிலையம் ஒரு சரியான போட்டியாக இருக்கும்.
புவியியல் ரீதியாக, இந்தியா மிகவும் சாதகமான சூழ்நிலையில் அமைந்துள்ளது. 12 மணி நேரத்துக்குள் நீங்கள் எந்த நாட்டுக்கும் பறந்து சென்று விடலாம் என்று அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பன்சால் கூறுகிறார்.
பல வழிகளில், அதானி குழுமத்தின் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சாட்டிலைட் நகரமான நவி மும்பையில் அமையவிருக்கும் இந்த விமானநிலையம் மூலம் சீனாவை மிஞ்சும் முயற்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் பெரிய உள்கட்டமைப்பு மறுசீரமைப்பின் ஒரு எடுத்துக்காட்டாக இது விளங்கும்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications