அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 100 பில்லியன் டாலர்களுக்கு கீழாக காணப்படுகிறது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது அதானி குழுமத்திற்கு எதிராக வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன, இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 98 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஜனவரி 24 அன்று ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றன.
ஜிடிபியில் பங்கு மதிப்பு
கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், பல வருடங்களாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதானி குழுமத்தின் நிகர மதிப்பி 134 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. அதானி குழும பங்குகளின் இந்தியாவின் வருடாந்திர ஜிடிபியில் 4.22% வளர்ச்சிக்கு சமமானது. இது 3.17 ட்ரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கோலாவின் ஜிடிபி
அதானி குழும பங்குகளின் மதிப்பானது அங்கோலாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சமமானது. அதானி குழுமத்தின் 10 பங்குகளின் சந்தை மதிப்பு 8,09,182 கோடி ரூபாயாக இருந்தது. இது சந்தையில் 82.76 ரூபாயின் மதிப்பில் 98 பில்லியனாக குறைந்துள்ளது.
அதானி குழுமத்தின் மதிப்பு
அதானி குழுமங்களின் சந்தை மதிப்பானது 11,10,706 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது 134 பில்லியன் டாலர் சரிவினைக் கண்டுள்ளது. இது முன்னதாக 19,19,888 கோடி ரூபாயாக இருந்தது. இது ஜனவரி 24 அன்று இருந்தது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவானது சமீபத்தில் வெளியானது. இதுவும் சந்தையில் ஏற்ற இறக்கத்தினை அதிகரித்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ்
அதானி குழுமத்தின் மற்றொரு முக்கிய பங்கான அதானி டோட்டல் கேஸ் மதிப்பும் மோசமான அளவில் சரிவினைக் கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பும் 3.30 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 96,656.81 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது ஜனவரி 24 அன்று 4.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மற்ற பங்குகள் எவ்வளவு சரிவு?
இது மட்டும் அல்ல அதானி குழுமத்தின் மற்ற மூன்று பங்குகளான, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி பவர் மற்றும் அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 39,977 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
சென்செக்ஸ் & நிஃப்டி நிலவரம்?
இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 19 புள்ளிகள் அல்லது 0.03% சரிவினைக் கண்டு, 60,673 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 18 புள்ளிகள் அல்லது 0.10% சரிவினைக் கண்டு, 17,827 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளன. நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிப்டி ஸ்மால் கேப் 100 குறியீடானது 0.36% சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளது.
அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்க, கெளதம் அதானி பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அந்த வியூகம் கைக்கொடுக்குமா? அதானி குழுமம் இழந்த மதிப்பு மீண்டும் மீண்டு வருமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications