அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்திய பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 25 நிறுவனங்கள் பட்டியலில் ஒரு நிறுவனங்கள் கூட இல்லாமல் உள்ளது.
இது மட்டும் அல்லாமல் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 8.09 லட்சம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் என்ற முக்கியப் பென்ச்மார்க் அளவீட்டை இழந்து தற்போது வெறும் 98 பில்லியன் டாலராக இருந்தது.
இது ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பை விடவும் குறைவாக உள்ளது.
டாப் 25 நிறுவனங்கள் பட்டியல்
டாப் 25 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கி 4வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களைச் சேர்த்தால் கூட ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்புடன் போட்டிப்போட முடியவில்லை என்பது தான். ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 9.18 லட்சம் கோடி ரூபாய்.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் 1,78,798 கோடி ரூபாய் சந்தை மதிப்பு உடன் 27வது இடத்திலும், அதானி போர்ட்ஸ் & SEZ 1,26,001 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் 37வது இடத்திலும், அதானி டோட்டல் கேஸ் 96,657கோடி ரூபாய் சந்தை மதிப்பு உடன் 49வது இடத்திலும், அதானி டிரான்ஸ்மிஷன் 92,613.78 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் 53 வது இடத்திலும், அதானி கிரீன் எனர்ஜி 89,917.60 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் 54வது இடத்தில் உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை
ஆனால் ஜனவரி 24 ஆம் தேதி அதாவது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாகும் முன் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 4,27,326 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 96,657கோடி ரூபாய் சந்தை மதிப்பு உடன் 49வது இடத்தில் உள்ளது.
ரூ.3-4 லட்சம் கோடி சந்தை மதிப்பீடு
இதேபோல் அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி நிலவரப்படி 3-4 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 24 நிலவரம்
மேலும் ஜனவரி 24 ஆம் தேதி இந்தியாவின் அதிக மதிப்புதக்க நிறுவனங்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்தது, இதேபோல் அதானி டிரான்ஸ்மிஷன் 12வது இடத்தில் இருந்தது. ஆனால் இன்று டாப் 25 நிறுவனங்கள் பட்டியலில் ஒரு அதானி குழும நிறுவனங்கள் கூட இல்லாமல் இருப்பது கௌதம் அதானிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
கௌதம் அதானி - வினோத் அதானி
கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி நீண்டகாலமாக என்ஆர்ஐ ஆக இருக்கிறார், இவரின் தலைமையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குழுமத்திற்குள் அதிகப்படியான நிதி உட்செலுத்தப்பட்டு உள்ளது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
போர்ப்ஸ்
இதைத் தொடர்ந்து போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இதற்கு முன்பு வெளியிடப்படாத அறிவிக்கப்படாத பரிமாற்றங்களில் வினோத் அதானிக்கு தொடர்புடைய ஆப்ஷோர் கணக்குகள் அதானி குழுமத்திற்குப் பலன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதை போர்ப்ஸ் கண்டுப்பிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
விக்கிபீடியா
நியூயார்க் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கௌதம் அதானிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை வெளியிட்ட ஒரு மாதத்திற்குப் பின் விக்கிபீடியா ஆசிரியர்கள் இப்போது அதானி குழுமத்தின் ஊழியர்கள் நடுநிலையற்ற PR தகவல்களை விக்கிப்பீடியா பக்கத்தில் "கிட்டத்தட்ட நிச்சயமாக" பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications