கென்யா கொடுத்த அதிர்ச்சி.. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 7% வரை வீழ்ச்சி..!!

அதானி குழுமத்தின் பங்குகள் 2வது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன, நவம்பர் 22, 2024 அன்று வியாழக்கிழமை, அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் காலை வர்த்தகத்தில் 7% வீழ்ச்சியடைந்து 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2,030 க்கு சரிவடைந்தது.

அதேபோல், அதானி போர்ட்ஸ் பங்குகளும் 5.3% சரிவடைந்து ரூ.1,055.40 க்கு குறைந்தது. அதானி பவர், அதானி எரிஜ் சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் உள்ளிட்ட மற்ற அதானி குழும நிறுவனங்களின் பங்குகளும் 2.6% முதல் 5% வரை வீழ்ச்சியடைந்தன.

கென்யா கொடுத்த அதிர்ச்சி.. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 7% வரை வீழ்ச்சி..!!

அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 11% வீழ்ச்சியடைந்து ரூ.1,020.85 க்கு வீழ்ச்சியடைந்தது. அதே நேரத்தில், ஏ.சி.சி லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் லேசான உயர்வுடன் நிலையாக வர்த்தகமாகின, ஆனால் அதிகளவிலான தடுமாற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

அதானி குழுமத்தின் பங்குகளின் தொடர் வீழ்ச்சி, இக்குழுமத்தின் எதிர்காலம் முதலீட்டாளர்களின் பெரும் கவலையாக மாறியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அதானி பங்குகள் மீது இந்திய வங்கிகள் அதிகப்படியான கடன்களை கொடுத்துள்ளது, மேலும் நாட்டின் பெரும்பாலான மியூச்சவல் பண்ட்கள் அதானி பங்குகள் மீது சிறிய அளவிலான முதலீட்டையாவது செய்துள்ளது. இந்த நிலையில் அதானி பங்குகளின் வீழ்ச்சி அனைத்து தரப்பு முதலீட்டாளர்களையும் கடுமையாகப் பாதிக்கிறது.

அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நேற்று மாலை கென்யா அரசு அதானி குழுமத்துடன் செய்து கொண்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பு அதானி குழுமத்தின் வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கத்தில் பெரும் தடையாக விளங்குகிறது.

கென்யா நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ, அமெரிக்காவின் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழுமத்துடன் செய்து கொண்டிருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மின்சார பரிமாற்ற லைன் அமைக்கும் திட்டங்களை ரத்து செய்துள்ளார். இது அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் SEC, FBI போன்ற அமைப்புகள் அதானி குழுமத்தின் மீது பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்திய அரசின் திட்டங்களை கைப்பற்றியதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தாலும், அமெரிக்க SEC கௌதம் அதானியின் மீது பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக கௌதம் அதானி அமெரிக்காவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பில் ஏற்பட்ட சரிவு அதன் சந்தை மதிப்பில் 2.25 லட்சம் கோடி ரூபாயும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 83000 கோடி ரூபாயும் குறைத்துள்ளது.

வாரத்தின் கடைசி நாளான இன்று வெள்ளிக்கிழமை வர்த்தக துவக்கத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு நிலவரம்.

அதானி எண்டர்பிரைசஸ் - 4.33 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் & SEZ - 4.09 சதவீதம் சரிவு
அதானி பவர் - 3.99 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 7.80 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 8.31 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 2.75 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 3.79 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 1.65 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.71 சதவீதம் உயர்வு
NDTV - 0.42 சதவீதம் உயர்வு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 1.44 சதவீதம் சரிவு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+