இந்தியாவில் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி-யின் அதானி குழும பங்குகள் GQG பார்ட்னர்ஸ் முதலீட்டுக்கு பின்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் சொன்னதை செய்துள்ளார் கௌதம் அதானி.
அதானி குழுமம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பங்குகளை அடமானமாக வைத்து வட்டியில் வாங்கிய கடனைகளை முன்கூட்டியே செலுத்துவதாக உத்தரவாதம் கொடுத்தார். இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அதானி குழுமம் சுமார் 2.15 பில்லியன் டாலர் அளவிலான நிறுவன பங்குகள் வைத்து வாங்கிய கடனுக்கு குறித்த தேதிக்கு முன்கூட்டியே அடைத்துள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமம் 2.15 பில்லியன் டாலர் அளவிலான நிறுவன பங்குகள் வைத்து வாங்கிய கடனுக்கு மார்ச் 31 என்ற குறித்த தேதிக்கு முன்கூட்டியே தீர்த்துள்ளது மூலம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது என இக்குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட்
இது மட்டும் அல்லாமல் சர்வதேச வங்கிகளிடம் கடந்த ஆண்டு Holcim நிறுவனத்தின் கட்டிப்பாட்டில் இருந்த அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு அதானி குழுமத்திற்க்கு சுமார் 4.5 பில்லியன் கடன் கொடுத்தன.
500 மில்லியன் டாலர் கடன்
இக்கடனில் முதல் தவணையான 500 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையும் முன்கூட்டியே அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழு செலுத்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வெறும் 6 வாரத்தில் 2.65 பில்லியன் டாலர் அளவிலான கடனை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐகேப் டிரஸ்ட்
இதேவேலையில் கடன்களை திருப்பி செலுத்தியதன் மூலம் அதானி குழுமத்தின் பங்குகள் கௌதம் அதானி கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில், இதில் பெரும் பகுதி பங்குகள் அதானி எண்டர்பிரைசர்ஸ் பெயரில் வாங்கிய கடனுக்கு உத்தரவாதமாக எஸ்பிஐகேப் டிரஸ்ட்-க்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
இதேபோல் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 3.4 சதவீத பங்குகளும், அதானி போர்ட்ஸ் & SEZ 4.1 சதவீத பங்குகளும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகள் என மொத்தம் 4 நிறுவனங்களில் சுமார் 21 கோடி பங்குகளை GQG Partners Inc நிறுவனத்திற்கு சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு கௌதம் அதானி விற்பனை செய்துள்ளார்.
நிதி உட்செலுத்துதல்
இதன் மூலம் அதானி குழும நிர்வாகம் சிமெண்ட் வர்த்தகத்தில் புதிதாக 2.6 பில்லியன் டாலர் நிதி உட்செலுத்துதல் வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக அதானி குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதானி குழும பங்குகள்
அதானி குழுமம் கடனை அடைத்தது மூலம் இன்று மும்பை பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலை என்ன தெரியுமா..?
அதானி எண்டர்பிரைசஸ் - 1.50 சதவீதம் உயர்வு
5 நாளில் - 5.88 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 1.18 சதவீதம் சரிவு
5 நாளில் - 1.37 சதவீதம் சரிவு
அதானி பவர் - 4.99 சதவீதம் உயர்வு
5 நாளில் - 21.14 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் உயர்வு
5 நாளில் - 21.53 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் உயர்வு
5 நாளில் - 21.54 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் உயர்வு
5 நாளில் - 21.53 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 2.05 சதவீதம் சரிவு
5 நாளில் - 0.88 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 3.59 சதவீதம் சரிவு
5 நாளில் - 6.11 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.07 சதவீத சரிவு
5 நாளில் - 5.65 சதவீதம் சரிவு
NDTV - 4.58 சதவீதம் சரிவு
5 நாளில் - 3.48 சதவீதம் சரிவு
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications