வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் ஜனவரி 24 ஆம் தேதி அறிக்கைக்குப் பதில் அளிக்கும் வகையில் அதானி குழுமம் சுமார் 413 பக்க அறிக்கையை வெளியிட்டது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

இந்த அறிக்கையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளது. இந்த 62 கேள்விக்கான பதில் மொத்த 413 பக்க அறிக்கையில் 30 பக்கம் மட்டுமே எஞ்சியுள்ள 330 பக்கத்திற்கு நீதிமன்ற ஆதாரங்களும், 53 பக்கத்திற்கு நிதி முடிவுகள் போன்றவை தான்.

இது தற்போதைய நிலையில் தேவையற்ற ஒன்று என ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 29ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..! ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!

ஜனவரி 24 அறிக்கை

ஜனவரி 24 அறிக்கை

ஆனால் எங்களுடைய அறிக்கையில் முக்கியக் குற்றச்சாட்டாக வைக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்தும், அதில் கௌதம் அதானி-யின் சகோதரர் வினோத் அதானி-யின் தொடர்பு குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு 413 பக்க அறிக்கையில் அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானி

கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மற்றும் அவரது வெளிநாட்டு ஷெல் நிறுவனங்களுடன் இணைந்து அதானி குழுமம் சந்தேகத்திற்குரிய வகையில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கணக்கியல் மோசடிகள்

கணக்கியல் மோசடிகள்

இந்தப் பரிவர்த்தனைகளில் தான் அதானி குழுமம் பங்கு மற்றும் கணக்கியல் மோசடிகள் செய்துள்ளதாக ஹிண்டன்பர்க் கேள்விகளைத் தனது ஜனவரி 26ஆம் தேதி அறிக்கையில் எழுப்பியது.

வினோத் அதானி தகுதிகள்

வினோத் அதானி தகுதிகள்

இதற்கிடையில் அதானி குழுமம், கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, குழுமத்துடன் தொடர்புடையோர் இல்லை, மேலும் இந்தச் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை தொடர்பாக, அதானி குழுமம் வெளிப்படுத்தக்கூடிய முரண்பாடுகள் எதுவும் இல்லை என அதானி குழும தரப்பில் இருந்து தெரிவித்துள்ளது.

38 நிறுவனங்கள்

38 நிறுவனங்கள்

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் உள்ள 38 நிறுவனங்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு உள்ளது.

ஸ்டாக் பார்க்கிங்

ஸ்டாக் பார்க்கிங்

இந்த 38 வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்து ஸ்டாக் பார்க்கிங் அல்லது அதானி கணக்கை இன்ஜினியரிங் செய்ததற்கான ஆவணங்களை ஹிண்டன்பர்க் தனது முதல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பணப் பரிமாற்றங்கள் குறித்தோ, அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் வினோத் அதானி குழுமத்துடன் தொடர்புடையோர் இல்லை எனத் தெரிவித்துள்ளது என ஹிண்டன்பர்க் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆஃப்ஷோர் ஷெல் நிறுவனங்கள்

ஆஃப்ஷோர் ஷெல் நிறுவனங்கள்

அதானி குழுமத்திற்கு வினோத் அதானியுடன் தொடர்புடைய ஆஃப்ஷோர் ஷெல் நிறுவனங்களிலிருந்து வந்த பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியின் மூலத்தைப் பற்றி ஹிண்டன்பர்க் கேட்ட நிலையில் அதானி குழுமம் அவர்களின் 'நிதி ஆதாரம்' பற்றி எங்களுக்குத் தெரியாது அல்லது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என பதில் அளித்துள்ளது.

பெரும்பாலான கேள்விகள்

பெரும்பாலான கேள்விகள்

ஹிண்டன்பர்க் ஜனவரி 26 ஆம் தேதி அறிக்கையில் பெரும்பாலான கேள்விகள் அதானி குழும நிறுவனங்கள் மற்றும் வினோத் அதானி தொடர்புடைய நிறுவனங்கள் மத்தியிலான நிதி பரிமாற்றங்கள் குறித்தது தான். ஆனால் அதற்கான நேரடி பதில் அளிக்கப்படவில்லை என இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு போன் கால்

ஒரே ஒரு போன் கால்

இதை இன்னும் எளிதாக விளக்க வேண்டுமெனில், கௌதம் அதானிக்கு அவரது சகோதரர் வினோத் ஏன் அதானி நிறுவனங்களுக்குப் பெரும் தொகையைக் கடனாகக் கொடுத்தார் என்பது குறித்தும், இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம்.

தெளிவான பதில்

தெளிவான பதில்

இது உண்மையாக இருந்தாலும் கௌதம் அதானி தனது சகோதரனை அழைத்து அவரிடம் கேட்பதன் மூலமாக மர்மத்தை எளிதில் தெளிவுபடுத்த முடியும். இல்லையெனில் கௌதம் அதானி தனது சொந்த குடும்ப முதலீட்டு அலுவலகத்தின் தலைவரை அழைத்துக் கூட இதைக் கேட்கலாம்.

ஷெல் நிறுவனங்கள்

ஷெல் நிறுவனங்கள்

அதுவும் முக்கியமாக ஏன் கௌதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஷெல் நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை வினோத் அதானி அனுப்புகிறார் என்பதை கேட்டாலே போதுமானது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani group connection with Vinod Adani And His 38 Offshore Shell Entities- hindenburg question

Adani group connection with Vinod Adani And His 38 Offshore Shell Entities- hindenburg question
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X