சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் வியட்நாமில் இரண்டு விமான நிலையங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அந்நாட்டில் ஒரு கப்பல் துறைமுகத்தை அமைக்க அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் வியட்நாம் அரசாங்கத்திடமிருந்து Da Nang பகுதியில் புதிய துறைமுகம் கட்ட ஆரம்பக்கட்ட ஒப்புதல் (in-principle approval) பெற்றது, இதைத் தொடர்ந்து தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.
வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை டெல்லியில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

"வியட்நாமின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள லாங் தாங் மற்றும் சூ லை விமான நிலையங்களை மேம்பட்ட முறையில் கட்டுவதன் மூலம், விமான போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் வியட்நாம் நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பை வலுப்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் தொகை மற்றும் கால அளவு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு, கௌதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி, வியட்நாமில் கப்பல் துறைமுகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், நீண்ட காலத்தில் திட்டத்தில் இந்த முதலீடு 10 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வியட்நாமின் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய பங்காற்றும்.
இந்த முதலீடு நிறைவேறும் பட்சத்தில், குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமத்தின் சர்வதேச விரிவாக்கத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
அதானி குழுமம் இஸ்ரேலின் ஹைஃபா (Haifa), இலங்கையின் கொழும்பு (Colombo), டான்சானியாவின் டார் எஸ் சலாாம் (Dar es Salaam) துறைமுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு இது 4 வது சர்வதேச துறைமுகமாக வியட்நாம் துறைமுகம் அமைந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தில் வியட்நாம் முதல் வெளிநாட்டு வர்த்தகமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications