ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை மூலம் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு இருக்கும் அதானி குழுமத்திற்குப் புதிய பிரச்சனையாக இக்குழுமத்தின் நிதி ஏற்பாடுகள் ESG துறையில் அதாவது Environmental, Social and Governance சந்தையில் சிவப்பு கொடி நிறைந்த துணை ஈடு வலை அமைப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும், இது முதலீட்டாளர்களுக்குப் புதிய ரிஸ்க் ஆக விளங்குகிறது என அறிக்கை வெளியாகியுள்ளது.
நார்வே நாட்டின் மிகப்பெரிய பென்ஷன் பண்ட் நிறுவனமான KLP சமீபத்தில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் அதானி குழுமம் தனது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் வாயிலாகக் கவனக்குறைவாக உலகின் மிகவும் மாசுபடுத்தும் சில நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் காரணத்தால் KLP பங்குகளை விற்பனை செய்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
Carmichael நிலக்கரி சுரங்கம்
பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் அதானி குழுமம் தனது கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளைத் துணை ஈடாக வைத்து ஆஸ்திரேலியாவில் இருக்கும் Carmichael நிலக்கரி சுரங்கத்திற்கு அதானி எண்டர்பிரைஸ் வாயிலாக நிதியளித்துள்ளது தெரிய வந்தது. தற்போது இந்த நிதியளிப்பு பருவநிலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை
வரிச் சலுகை நிறைந்த உலக நாடுகளின் கணக்குகள் வாயிலாகப் பங்கு விலையில் உயர்த்தியது தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அதானி குழுமத்தில் இருக்கும் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 125 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் கடுமையாக மறுத்துள்ளது.
Ulf Erlandsson குற்றச்சாட்டு
இதேபோல் அதானி குரூப் நிறுவனத்தின் பிற முதலீடுகள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் Carmichael நிலக்கரி சுரங்கத்திற்கு வந்துள்ளது என 2020 மத்தியில் இருந்து அதானி குழுமம் பங்குகளையும், முதலீடுகளையும் கண்காணித்து வரும் Anthropocene Fixed Income Institute நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கும் Ulf Erlandsson தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
மேலும் அவர் கிரீன்ஃபீல்ட் தெர்மல் நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிதியளிப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்ட முதலீட்டாளர்கள் அதானி குழுமம் முழுவதும் சாத்தியமான வெளிப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எர்லாண்ட்சன் ப்ளூம்பெர்க்கிடம் கூறியுள்ளார்.
500 நிறுவனங்கள்
இதில் என்ன பெரிய விஷயம் என நீங்க கேட்கலாம், ஐரோப்பிய யூனியனில் சுமார் ESG இலக்குகளை ஊக்குவிக்கும் சுமார் 500க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதானி பங்குகளை முதலீடு செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் 500 நிறுவனங்களும் முதலீடுகளை மறுசீரமைப்பு, மறு ஆய்வு செய்தால் கட்டாயம் பெரும் பாதிப்பை அதானி குழும பங்குகள் எதிர்கொள்ளும்.
Sustainalytics அமைப்பு
Sustainalytics அமைப்புச் சமீபத்தில் அதானி கிரீன் உட்பட அதானி குழுமத்தின் 3 நிறுவனங்களைக் கார்பரேட் நிர்வாகக் குறித்து அதன் மதிப்பீட்டைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் அதானி கிரீன் எனர்ஜி தனது கடனுக்கான மறுநிதிஅளிப்புத் திட்டத்தைத் தீட்டி வரும் வேளையில் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வெளியிட உள்ளது.
Forbes அறிக்கை
இதேவேளையில் Forbes கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் சிங்கப்பூர் நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளை அடமானமாக வைத்து சுமார் 240 மில்லியன் டாலர் அளவிலான கடனை ரஷ்ய வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ளதும். இதுக்குறித்து இந்திய பங்குச்சந்தையில் எவ்விதமான அறிக்கையும் சமர்ப்பிக்காது குறித்துச் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தச் செய்தியை ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications