100 பில்லியன் டாலரை தொட்ட அதானி குரூப்.. புதிய மைல்கல்-ஐ அடைந்த கௌதம் அதானி..!

இந்திய வர்த்தகச் சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றான ஆதானி குருப் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் 3வது நிறுவனமாக அதானி குருப் 100 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டைக் கடந்துள்ளது. கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் 6 நிறுவனங்கள் மட்டுமே மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

 அதானி குரூப்

அதானி குரூப்

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 6ல் நான்கு நிறுவன பங்குகள் இன்று புதிய உச்சத்தைத் தொட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் அதானி குரூப்-ன் மொத்த மதிப்பு 104 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய மைல்கல்-ஐ தொட்டு உள்ளது.

 நிலக்கரி திட்டம்

நிலக்கரி திட்டம்

சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தை இயக்கவும், வளர்ச்சி செய்யவும் மிக முக்கியமான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான காரே பால்மா II கோலினரிஸ் பிரைவேட் லிமிடெட்ட நிறுவன இணைந்து மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் கைப்பற்றியுள்ளது.

சுமார் 34 வருடம் காலம் கொண்ட மாபெரும் ஒப்பந்தமாகும். ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 23.6 மில்லியன் டன் நிலக்கரி ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 553.177 மில்லியன் டன் நிலக்கரி நிலுவையில் உள்ளது.

 

 துறைமுக வர்த்தகம்

துறைமுக வர்த்தகம்

இதேபோல் கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தில் மீதமுள்ள 25 சதவீத பங்குகளையும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் முழுமையாகக் கைப்பற்றி மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

 நெடுஞ்சாலை திட்டங்கள்

நெடுஞ்சாலை திட்டங்கள்

இதேவேளையில் அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் கிளை நிறுவனமான அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ராய்பூர் முதல் விசாகப்பட்டினம் முதல் அமைக்கப்பட உள்ள பாடாகுமாரி - கார்கி பகுதியின் NH130 6 வழி சாலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.

மேலும் தேர்தல் அதிரடியில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தின் பானாகார் முதல் பால்சிட் பகுதியில் NH19 6 வழி சாலை அமைக்கும் திட்டத்தையும் அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் கிளை நிறுவனமான அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

 புதிய உச்சத்தைத் தொட்ட பங்குகள்

புதிய உச்சத்தைத் தொட்ட பங்குகள்

இப்படி அடுத்தடுத்து வர்த்தகத்தைக் கைப்பற்றும் காரணத்தால் அதானி எண்டர்பிரைசர்ஸ் 1,202 ரூபாயும், அதானி டோட்டல் கேஸ் 1,248 ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷன் 1,147 ரூபாயும், அதானி போர்ட்ஸ் 791 ரூபாய் என்று புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.

 104 பில்லியன் டாலர்

104 பில்லியன் டாலர்

இதனால் அதானி குரூப்-ன் மொத்த சந்தை மதிப்பு 104 பில்லியன் டாலர் அளவீட்டை முதல் முறையாகவும், இந்தியாவில் 3 நிறுவனமாகவும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

 டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இதற்கு முன் இந்தியாவில் டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு நிறுவனங்கள் 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி டாடா குரூப்-ன் மொத்த சந்தை மதிப்பு 242 பில்லியன் டாலர், முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 190 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+