இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான அதானி குழுமம் சமீபத்தில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தரை தட்டின.
எனினும் இந்த சரிவினை மீட்டு எடுக்க அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதானி குழும நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறித்தான கணிப்பினை குறைத்துள்ளது. இது அதன் புதிய மூலதன முதலீடுகளை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது வந்துள்ளது.
100 பில்லியனுக்கு மேல் சரிவு
இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனரான கெளதம் அதானி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு வந்துள்ளது.
ஹிண்டர்ன்பர்க் அறிக்கை
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மோசடியான பணபரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, போலியான பெயரில் நிறுவனங்கள் என பல மோசடிகளில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் தரை தட்டின எனலாம்.
பொய்யான குற்றச்சாட்டு
அதானி குழுமமோ ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டு என்பது ஆதாரமற்றது. இது பொய்யானது. இது சரியான தகவல்களை ஆதாரமாக கொண்டு ஆய்வு செய்யப்படவில்லை. இதற்காக ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் ஒரு போதும் அதானி குழுமத்தினை தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தது. மொத்தத்தில் ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டினை மறுத்த நிறுவனம், திரும்ப அதானி குழுமம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
கடனை அடைக்க திட்டமா?
தனது குழும நிறுவனங்களின் வருவாயில் 15 - 20% குறைத்துள்ள நிலையில், இது முன்னதாக கணிக்கப்பட்ட இலக்கில் இருந்து 40% வரையில் குறையலாம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றது. தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் அதானி குழுமம், தனது முதலீடுகளை குறைத்து கடனை அடைக்க திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.
என் எஸ் இ சூப்பர் அப்டேட்
இதற்கிடையில் அதானி குழும பங்குகளின் ஏற்றத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், கூடுதல் கண்காணிப்பில் இருந்த 3 அதானி குழும பங்குகளை என்எஸ்இ நீக்கியுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த பங்குகள் மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
என்னென்ன பங்குகள் நீக்கம்?
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & செஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் தான் கூடுதல் கண்காணிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மேற்கொண்டு வரும் நாட்களில் அதானி குழும பங்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனலாம்,.
நீண்டகால வளர்ச்சி?
அதேசமயம் மூலதன முதலீடுகளை குறைத்தால் அதானி குழும நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சி என்பது எப்படியிருக்கும்? கடனை அடைத்தால் அடிப்படையில் வலுவானதொரு நிறுவனமாக அதானி குழுமம் மாறலாம் என்றாலும், நீண்டகால வளர்ச்சி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. அதோடு அதானி குழுமத்தின் சில பங்குகளை ஸ்டேபிள் என்ற நிலையில் இருந்து நெகட்டிவ் என எதிர்மறையாக மாற்றம் செய்துள்ளது. இதுவும் அதானி குழும பங்குகள் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் அதானி குழும பங்குகள் எப்படியிருக்கும் என்பதையும் இனி பொறுத்திருந்தான் பார்ப்போமே.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications