அதானி குழுமம் தனது வர்த்தகத்தை தொடர்ந்து மறுசீரமைப்பு செய்து வரும் வேளையில், இன்று காலையில் TAQA எனப்படும் Abu Dhabi National Energy Co. PJSC உலகின் 11 நாடுகளில் எனர்ஜி மற்றும் தண்ணீர் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வரும் நிறுவனம் அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் அல்லது அதானி பவர் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக தகவல் வெளியானது.
இந்த செய்தி பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் அதானி பவர் பங்குகள் சுமார் 6.34 சதவீதம் வரையில் உயர்ந்தது, அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 6.04 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 6.68 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவிலான லாபத்தை கொடுத்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

அதானி பவர் நிறுவனத்திலோ அல்லது அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களிலோ அபுதாபி நாட்டின் TAQA எனப்படும் Abu Dhabi National Energy Co. PJSC முதலீடு செய்யவது குறித்து எவ்விதமான ஆலோசனையும், பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது பங்குச்சந்தையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதானி குழுமம்.
அபுதாபி நாட்டின் பங்குச்சந்தையில் இருக்கும் 2வது பெரிய நிறுவனமான TAQA எனப்படும் Abu Dhabi National Energy Co. PJSC உலகின் 11 நாடுகளில் எனர்ஜி மற்றும் தண்ணீர் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வருகிறது.

TAQA தற்போது இந்தியாவில் தனது முதலீட்டை 2 மடங்கு அதிகரிக்க முடிவு செய்து அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மதிப்பீடு செய்யும் பணிகளை செய்து வருவதாக தகவல் வெளியானது, ஆனால் இதை முற்றிலும் தவறு என மறுத்துள்ளது அதானி குழுமம்.
TAQA, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் சுமார் 1.5 முதல் 2.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யும் எனவும், இதன் மூலம் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் சுமார் 19.9 சதவீத பங்குகளை TAQA கைப்பற்றும் என கணிக்கப்பட்டது. ஆனால் இது முற்றிலும் தவறு என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications