கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதானி குழுமத்திடம் யாரும் போட்டி போட முடியாத ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருந்தது. சொல்லப்போனால் உலகின் இரண்டாவது பில்லியனர் என்ற இடத்தில் இருந்தார்.
ஆனால் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கையால் இன்று 21வது இடத்திற்கு கீழாக சென்று விட்டார்.
ஒரே வாரத்தில் அதானி குழுமத்தின் நிகர மதிப்பானது மிக மோசமான சரிவினை கண்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளன.
முதலீட்டாளார்கள் அச்சம்
ஹிண்டர்ன்பர்க்கின் ஆய்வறிக்கையானது சர்வதேச முதலீட்டாளர்கள் தொடங்கி, இந்திய முதலீட்டாளார்கள் வரையில், பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனை எப்படியேனும் சரி செய்து விட வேண்டும் என்று அதானி குழுமம் நடவடிக்கை எடுத்தாலும், எல்லாம் அதானி குழுமத்திற்கு எதிராகவே வந்து கொண்டுள்ளன.
மிகப்பெரிய தாக்கம்
பல்வேறு தரப்பினரும் அதானி குழும நிறுவனங்களின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்த நிலையில், இது இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது, கடந்த ஜனவரி 24 அன்று வெளியானது. இது மிகப்பெரிய தாக்கத்தினை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
21 வது இடத்தில் கெளதம் அதானி
இது அதானியின் நிகர மதிப்பிமும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்தவர் இன்று 21வது இடத்திற்கு ப்ளூம் பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி சரிவினைக் கண்டுள்ளார்.
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது ஒன்று தான் என்றாலும், இது முதலீட்டாளார்கள் மத்தியில் ஓராயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிரெடிட் சூசி எச்சரிக்கை
ஆரம்பத்தில் அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தாலும், தற்போது செபியும் இது குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியும் அதானி குழுமத்தின் கடன் குறித்த அறிக்கையினை வங்கிகளிடம் கேட்டுள்ளது. இதற்கிடையில் சில சர்வதேச நிதி நிறுவனமான கிரெடிட் சூசி, அதானி குழுமத்தின் பங்கு பத்திரங்களுக்கு யாரும் கடன் கொடுக்க வேண்டாம்ம் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என கூறியுள்ளது. இது மேற்கொண்டு அதானி பங்குகள் சரிய காரணமாக அமைந்துள்ளது.
பங்கு சந்தையிலும் தடை
இப்படி அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வரும் அதானி நிறுவனங்கள் பல, இன்று பங்கு சந்தையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிரபல பங்கு சந்தையான நியூயார்க் பங்கு சந்தையிலேயே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதானி குழும பங்குகள் சரிவடைய காரணமாக அமையலாம்.
ரிசர்வ் வங்கியின் அச்சம்
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியும் அதானி குழுமத்தியின் நிதி ஸ்திரத்தன்மை நிலையில்லாமல் உள்ளது. அக்குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் நிலை என்ன. முன் எச்சரிகை நடவடிக்கையாக இது எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இது மேற்கொண்டு முதலீட்டாளார்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு சந்தையில் கண்கானிப்பு
இதற்கிடையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான 3 நிறுவனங்களை கண்கானிப்பி வைத்துள்ளதாக பங்கு சந்தை வாரியம் தெரிவித்துள்ளது. எனினும் இது கண்கானிப்பு மட்டுமே. இது நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும் பங்கு சந்தை வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எது எப்படியோ? ஒரு கட்டத்தில் உலகின் டாப் 10 பில்லியனர்களில் 2வது இடத்திற்கு முன்னேறியவர், இன்று முதல் 20 இடங்களில் இல்லை என்பது, பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே மாறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications