அதானி ஓன்.. இந்தா இவரும் வந்துட்டாருல்ல..!

இந்தியாவின் அனைத்து முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களும் தற்போது மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்யும் திட்டத்திற்கு வந்துள்ளது.

முன்பெல்லாம் B2B பிரிவில் மட்டுமே அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வந்த வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் தற்போது ரீடைல் வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

இதற்கு முதல் முக்கியமான காரணம் டிஜிட்டல் சேவை வளர்ச்சி அடைந்துள்ளது தான். இதனால் தற்போது ரீடைல் சந்தையில் நேரடியாக மக்களிடம் பொருட்களையும், சேவைகளையும் விற்பனை செய்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது.

அதானி குரூப்

அதானி குரூப்

ரிலையன்ஸ், டாடா, பிர்லா, JSW போன்ற பல வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் நேரடியாக ரீடைல் சந்தையில் இறங்கியுள்ள நிலையில் தற்போது அதானி குழுமமும் இறங்கியுள்ளது. அதானி குரூப் தனது முதல் நுகர்வோர் தளத்தை மக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது.

அதானி ஓன்

அதானி ஓன்

அதானி ஓன் எனப்படும் தளத்தில் மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்யவும், சேவைகளை அளிக்கவும் கௌதம் அதானி தனது ஏர்போர்ட் வர்த்தகப் பிரிவில் இந்த அதானி ஓன் தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.

விமான நிலையம் வர்த்தகம்

விமான நிலையம் வர்த்தகம்

அதானி ஓன் தளத்தின் மூலம் அதானி குழுமம் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து விமான நிலையத்திலும் விமானப் பயணிகள் விமான டிக்கெட் புக்கிங், கேப் புக்கிங், பிளைட் ஸ்டேடஸ், டியூட்டி ஃப்ரீ கடைகளில் பொருட்களை வாங்குவது எனப் பல சேவைகளை இத்தளத்தின் மூலம் பெற முடியும்.

அதானி ஒன் - டிஜிட்டல் பயணம்

அதானி ஒன் - டிஜிட்டல் பயணம்

அதானி ஒன் கஸ்டமர் ஆல்பா அறிமுகத்துடன், எங்கள் டிஜிட்டல் பயணத்தில் ஒரு படி முன்னேறியுள்ளோம். எங்கள் பாரம்பரிய வணிகங்களுக்கு இணையாக டிஜிட்டல் டிவின் தளமாக அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என அதானி குரூப்-ன் தலைமை டிஜிட்டல் அதிகாரி மற்றும் துணை தலைவர் நித்தின் சேதி தெரிவித்துள்ளார்.

நித்தின் சேதி

நித்தின் சேதி

அதானி ஒன் தளத்தைத் தற்போது விமான நிலைய வர்த்தகப் பிரிவுக்கு மட்டுமே அறிமுகம் செய்துள்ளோம், இந்த வர்த்தகம், சேவை, வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், அடுத்தடுத்த துறைக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக நித்தின் சேதி தெரிவித்துள்ளார்.

ஏழு விமான நிலையங்கள்

ஏழு விமான நிலையங்கள்

அதானி குழுமம் தற்போது மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஏழு விமான நிலையங்களை இயக்குகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், டிஜிட்டல் சேவை பிற விமான நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

குஜராத் பெட்ரோ கெமிக்கல்

குஜராத் பெட்ரோ கெமிக்கல்

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் கௌதம் அதானி, சமீபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு போட்டியாகக் குஜராத் மாநிலத்தில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் 4 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

கௌதம் அதானி

கௌதம் அதானி

கௌதம் அதானி சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அதானி விமான நிலைய பயணிகளை மற்ற அதானி குழும சேவைகளுடன் இணைக்க அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் 'சூப்பர் ஆப்' அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

உபர் மற்றும் அதானி கூட்டணி

உபர் மற்றும் அதானி கூட்டணி

இதைத் தொடர்ந்து உபர் மற்றும் அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் இணைந்து பயணிகளை மையமாகக் கொண்ட பல சேவைகளை வழங்க புதிய முயற்சியில் இறங்க முடிவு செய்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இதன் எதிரொலியாகத் தற்போது அதானி ஓன் செயலி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+