சென்னை: அதானி குழுமம் தனது ரீடைல் வியாபாரத்தில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவையை மேம்படுத்தும் வகையில், விமான நிலைய சேவைகளுடன் கூடிய கோ பிராண்டெட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி முதல் முறையாக நிதித் துறையில் நுழைந்துள்ளது.
அதானி குழுமம் பல துறையில் இயங்கி வந்தாலும், இதுநாள் வரையில் நிதி துறையிலோ அல்லது நிதி சார்ந்த பிற துறைகளிலோ பணியாற்றியது இல்லை. மேலும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போல ரீடைல துறையில் பெரும் வர்த்தகத்தையும் வருமானத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் கௌதம் அதானிக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாகவே உள்ளது.

அதானி குழுமம் ரீடைல் துறையில் தனது வர்த்தகத்தை அதிகரிக்க பிள்ளையார் சுழி போட்டது ஒரு ஆப். அதானி குழுமத்தின் டிஜிட்டல் பயணத்தின் ஒரு "முன்னேற்றம்" என்று 2022 டிசம்பரில் தொடங்கப்பட்ட அதானி ஒன் செயலி, டிக்கட் முன்பதிவு, விமானத்தில் ஸ்டேட்டஸ் பார்ப்பது, ஓய்வு அறைகளை அணுகல், சுங்க விலையில்லா பொருட்களை வாங்குதல், டாக்சி வாடகை மற்றும் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு பயண சேவைகளை வழங்குகிறது.
இந்த நிலையில் அதானி ஒன் செயலி சேவைகளுடன் கிரெடிட் கார்டு வசதியை இணைக்கும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது அதானி குழுமம். புதிய கூட்டு முயற்சியில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் விசா நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் முதல் விமான நிலைய சேவைகளுடன் கூடிய கோ பிராண்டெட் கிரெடிட் கார்டை அதானி ஒன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கிரெடிட் கார்டுகளை வாங்குவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், விமான நிலைய மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட பல்வேறு சலுகைகளுடன் வருகின்றன. அதானி ஒன் செயலி மூலம் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்கள், ரயில்கள், பேருந்துகள் மற்றும் டாக்சிகளை புக் செய்யலாம்.
மேலும் அதானி குழுமம் நிர்வகிக்கும் விமான நிலையங்கள்; அதானி சிஎன்ஜி பம்ப் நிலையங்கள்; அதானி மின்சார கட்டணங்கள்; மற்றும் ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவு தளமான Trainman போன்ற அதானி குழுமத்தின் நுகர்வோர் சேவைகளில் செலவழிக்கும் தொகையில் 7 சதவீதம் வரை அதானி ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும் என்று அதானி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த கோ பிராண்டெட் கார்டுக்கு வரவேற்பு சலுகையாக இலவச விமான டிக்கெட்டுகள் மற்றும் பிரீமியம் ஓய்வு அறை அணுகல், ப்ரணாம் மீட் & கிரீட் சேவை, போர்ட்டர், வாலே பார்க்கிங் மற்றும் பிரீமியம் கார் பார்க்கிங் போன்ற விமான நிலைய சலுகைகளையும் வழங்கும்.
அதுமட்டுமின்றி, கார்டு பயனர்கள் சுங்க விலையில்லா கடைகளில் அதாவது Duty Free கடைகளில் ஷாப்பிங் செய்வதற்கும், விமான நிலையங்களில் உள்ள உணவு மற்றும் குளிர்பான/மதுபான செலவுகளுக்கும் தள்ளுபடிகளைப் பெறுவார்கள்.
மேலும், இலவச திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் மளிகைப் பொருட்கள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கான அதானி ரிவார்டு புள்ளிகள் போன்ற சலுகைகளையும் பெறுவார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications