அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கச்சு காப்பர் (Kutch Copper) முந்திராவில் அமைந்துள்ள தனது கிரீன்பீல்டு காப்பர் சுத்திகரிப்பு ஆலையின் முதல் பிரிவை வியாழக்கிழமை தொடங்கியது என்று நிறுவனம் பங்குச்சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உலோக சுத்திகரிப்பிலும், தயாரிப்பிலும் அடியெடுத்து வைத்துள்ளது. அதானி குழுமம், குஜராத்தில் உள்ள முந்த்ராவில் உலகின் மிகப்பெரிய ஒரு இடத்தில் தாமிர உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. அம்பானி எப்படி உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை ஓரே இடத்தில் அதுவும் குஜராத் ஜாம்நகரில் வைத்திருக்கிறாரோ, அதேபோல் அதானி single-location அடிப்படையிலான உலகின் மிகப்பெரிய காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கப்பட்டு உள்ளது.

அதானி குழுமத்தின் இந்த கட்ச் காப்பர் ஆலை, முதற்கட்டமாக ஆண்டுக்கு 0.5 மில்லியன் டன் திறன் கொண்ட தாமிர உருக்கு (smelter) அமைக்கக் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் அதாவது ரூ.981 கோடி முதலீடு செய்துள்ளது. கட்ச் காப்பர் ஆலையின் முழு திட்டத்தின்படி, இந்த ஆலையின் மொத்த உற்பத்தி திறன் 1 மில்லியன் டன்னாக இருக்கும், இது இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும்.
இத்தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் முடிந்ததும், கச்சு காப்பர் ஆலை உலகின் மிகப்பெரிய ஒரே இடத்தில் இயங்கும் தனிப்பட்ட சுத்திகரிப்பு ஆலையாக திகழும். மேலும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டலைசேஷனைப் பயன்படுத்தி ESG செயல்பாட்டுத் தரங்களை உயர்ந்த நிலையில் பராமரிக்கும் என்று அதானி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 2,000 நேரடி வேலைவாய்ப்புகளும் 5,000 மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் வலைப்பின்னல்கள் ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாகத் தாமிரத்திற்கான தேவை அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் துணை நிறுவனமான கச்சு காப்பர், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் தாமிர குழாய்களையும் தயாரிக்கும் "கச்சு தாமிர குழாய்கள் லிமிடெட்" (Kutch Copper Tubes Limited) என்ற நிறுவனத்தை நிறுவி தனது தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா ஒரு காலத்தில் காப்பர் ஏற்றுமதி நாடாக இருந்து தற்போது காப்பர் இறக்குமதி நாடாக உள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் 2018ல் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மூடியது தான். இந்த ஒரு தொழிற்சாலை மூலம் நாட்டின் 46 சதவீத காப்பர் உற்பத்தி தடைப்பெற்றது.
இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்குக் குறிப்பாக உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான மற்றும் அதிகம் டிமாண்ட் இருக்கும் துறையில் நுழைய உள்ளது. அதானி குழுமத்தின் என்டரி இத்துறையில் வர்த்தகம் செய்யும் ஒருவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications