இலங்கையில் முதலீடா.. அதானியின் திட்டம் தான் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுபிக்கதக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில், இந்திய பில்லியனர் அதானி முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்தில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51% பங்கினை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில் தான் அதானியின் முதலீடுகள் மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷாவை சந்தித்தப் பிறகு வெளியாகியுள்ளது.

முதலீடுகள் பற்றி விவாதித்து இருக்கலாம்

முதலீடுகள் பற்றி விவாதித்து இருக்கலாம்

தனிப்பட்ட பயணமாக இலங்கைக்கு பயணம் செய்ததாகவும், ஜனாதிபதியை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் ஜனாதிபதியை சந்தித்த அதானி மேற்கண்ட முதலீடுகள் பற்றி விவாதித்திருக்கலாம் என்ற யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பல நாடுகளிலும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் அதானி, தற்போது இலங்கையிலும் கால் பதித்துள்ளார்.

அதானிக்கு கடந்த மாதம் அனுமதி

அதானிக்கு கடந்த மாதம் அனுமதி

சமீபத்தில் தான் இலங்கை அரசு கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கண்டெய்னர் முனையத்தினை, மேம்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக வணிகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கின. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இலங்கையில் இந்திய நிறுவனம் முதலீடு செய்ய அனுமதிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவில் சோலார்
 

இந்தியாவில் சோலார்

சமீபத்திய மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் மூலதன பொருட்கள் உற்பத்தியில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக கூறியிருந்தது. இதன் மூலம் உலகின் மலிவான பசுமை எலக்ட்ரானை உற்பத்தி செய்யும் என கூறியிருந்தார். கப்பல் முதல் எனர்ஜி வரையிலான துறையில் வளர்ச்சி கண்டு வரும் அதானி, புதுபிக்கதக்க மின் உற்பத்தியினை அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

அம்பானியின் திட்டம்

அம்பானியின் திட்டம்

நாட்டின் மற்றொரு பில்லியனர் ஆன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி கிளீன் பவர் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்திற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து உள்நாடுகளில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை செய்யும் அம்பானியும், அதானியும் தற்போது அண்டை நாடுகளிலும் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group exploring investment in sri lanka’s energy and some other sector

Adani Group exploring investment in sri lanka’s energy and some other sector
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X