அதானி குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிமெண்ட் உற்பத்தி துறையில் நுழைந்தது. ஆனால் தற்போது இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. இருப்பினும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் அதானி குழுமத்தின் இலக்கு. எனவே தற்போது திவால் நடைமுறைகளை எதிர்கொண்டிருக்கும் ஜெய்பிரகாஷ் சிமெண்ட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜெயப்பிரகாஷ் சிமெண்ட் நிறுவனம் தங்களிடம் வாங்கிய கடனை திரும்ப வழங்கவில்லை எனக் கூறி அந்த நிறுவனத்தின் மீது ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகியவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் கடந்த மாதம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஜெயப்பிரகாஷ் அசோசியட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் திவால் நடைமுறைகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டது.

இதன்படி ஜெய்பிரகாஷ் நிறுவன சொத்துகளை விற்பனை செய்து தங்கள் கடன்களை பெற்றுக் கொள்ள வங்கிகள் தீவிரம் காட்டுகின்றன. இதனை பயன்படுத்தி இந்நிறுவனத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் அதானி குழுமம் இறங்கியுள்ளது. குறிப்பாக சிமெண்ட் உற்பத்தி மற்றும் லைம் ஸ்டோன் சுரங்கம், மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை வாங்குவதற்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் அதானி குழுமம் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முதலிடத்தை தக்கவைக்க அல்ட்ராடெக், டால்மியா மற்றும் ஜே எஸ் டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அல்ட்ராடெக் நிறுவனம் அண்மையில் தான் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 19.44 சதவீத பங்குகளை வாங்கி வாங்கியது கூடிய விரைவில் மேலும் 3.4 சதவீத பங்குகளை வாங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் டால்மியா பாரத் நிறுவனம் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் ஜெய்பிரகாஷ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிலை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்தது. 5,666 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் அந்த சமயத்தில் டால்மியா நிறுவனத்தால் .
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 2016 ஆம் ஆண்டிலேயே ஜெயப்பிரகாஷ் நிறுவனத்திற்கு சொந்தமான உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிமெண்ட் ஆலையை கைப்பற்றுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் அதிலும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் அதானி குழுமம் இந்த போட்டியில் இறங்கி உள்ளது. அதானி குழுமம் அண்மையில் ஐதராபாத்தை சேர்ந்த பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை 10,422 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
அது மட்டும் இன்றி சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிலை 5,185 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போதைய சூழலில் அதானி சிமெண்ட்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 89 மில்லியன் டன்கள் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications