அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் கெளதம் அதானி, ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் அறிக்கை நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக திட்டமிட்டு செய்த வேலை என்று தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் மூலம் அதானி பங்குகளின் விலை குறைவினால் ஆதாயம் அடைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் திட்டமிட்ட முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
கௌதம் அதானியின் இந்த அதிரடி கருத்து வெளியான உடனேயே இன்று 8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்று பிளாக் டீல் மூலம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி பங்குகள் இன்று அதிகப்படியாக உயர துவங்கியுள்ளது.

ஹிண்டன்பர்க் சம்பவத்திற்கு பின்பு கடந்த நான்கு மாதங்களில் அதானி குழுமம் தனது பங்குகளை விற்பனை செய்து மூன்றாவது முறையாக முதலீட்டை ஈர்த்துள்ளது. இது ரீடைல் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வாய்ப்பாக அதானி குழுமம் பார்க்கிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட GQG பார்ட்னர்ஸ் உட்பட பிற முதலீட்டு நிறுவனங்கள் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் 1 பில்லியன் டாலர் அதாவது இன்றைய டாலர் மதிப்பின் படி 8199 கோடி ரூபாய் மதிப்புள்ள அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
GQG பார்ட்னர்ஸ் மற்றும் பிற முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தின் 8199 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பிளாக் டீல்கள் மூலம் வாங்கியுள்ளதாக ஈடி நவ் தெரிவித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் GQG பார்ட்னர்ஸ் தலைமையிலான முதலீட்டாளர்கள் அதானி கிரீன் நிறுவனத்தில் 2.2 சதவீத பங்குகளையும், அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 1.6 சதவீத பங்குகளையும் விற்கின்றனர்.
இந்த பிளாக் டீல் வாயிலாக அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் சுமார் 18 மில்லியன் பங்குகளும், அதானி கிரீன் நிறுவனத்தின் சுமார் 35.2 மில்லியன் பங்குகளும் கைமாறியுள்ளது. இதன் மூலம் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 5.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?
அதானி எண்டர்பிரைசஸ் - 5.07 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 5.02 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 0.51 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.81 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 0.81 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 1.91 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 1.67 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 1.18 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.30 சதவீதம் சரிவு
NDTV - 0.65 சதவீதம் சரிவு


Click it and Unblock the Notifications