எல்லாம் வதந்தி.. கிராண்ட் தோர்டனை நியமனம் செய்யவில்லை.. அதானி குழுமம் நிராகரிப்பு!

அதானி குழுமம் இழந்த நம்பிக்கையை மீட்க பல்வேறு வகையிலும் முயற்சி எடுத்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமத்தின் அறிக்கைகளை சரிபார்க்க சுயதீன தணிக்கையாளராக கிராண்ட் தோர்டன் என்ற நிறுவனத்தினை நியமனம் செய்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இப்படி தாங்கள் எந்த நியமனத்தையும் செய்யவில்லை, எல்லாம் வதந்தி என தெரிவித்துள்ளது.

இது குறித்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த அறிக்கை வதந்தி என மறுத்துள்ளது.

ஏன் இந்த விளக்கம்?

ஏன் இந்த விளக்கம்?

இந்த செய்தி ஒரு வதந்தி என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.. என அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த அறிக்கையானது அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையானது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. குறிப்பாக ஷெல் நிறுவனங்கள் மூலமாக மோசடியான பணப் பரிவர்த்தனை செய்ததாக ஜனவரி 24 அன்று குற்றம் சுமத்தியது.

ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு

ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு

மேலும் ஹிண்டர்ன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளில் இணையதளம் கூட இல்லாத, பெரியளவில் அனுபவம் என்பது இல்லாத இளைஞர்களை வைத்து, சில நிறுவனங்களின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டினை முன் வைத்தது. ஆக இதனை தெளிவுப்படுத்தும் விதமாக, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதானி குழுமம் கிராண்ட் தோர்டனை நியமனம் செய்ததாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் அதானி குழுமமோ அப்படி ஏதும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்று இன்று விளக்கம் கொடுத்துள்ளது.

பாதியாக குறைந்த மதிப்பு

பாதியாக குறைந்த மதிப்பு

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில் அதானி குழும பங்குகள் பலவும் தரை தட்டின எனலாம். தொடர்ந்து பல பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் மதிப்பானது 120 பில்லியன் டாலருக்கும் மேலாக வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. இது ஜனவரி 24 பிறகு சில வாரங்களுக்குள்ளேயே இந்த அளவுக்கு வீழ்ச்சியினை கண்டுள்ளது.

அமித் ஷா கருத்து?

அமித் ஷா கருத்து?

சில தினங்களுக்கு முன்பு அமித் ஷா, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு குறித்து, பாரதிய ஜனதா கட்சி மறைக்கவோ அல்லது பயப்படவோ எதுவுமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவிப்பது என்பது சரியாக இருக்காது என்றும் கூறினார்.

வெறும் வதந்தி தான்

வெறும் வதந்தி தான்

அதானி குழுமத்தின் மீதான மதிப்பினை பல்வேறு தர குறியீட்டு நிறுவனங்களும், மதிப்பீட்டினை குறைத்து வரும் சூழலில், இத்தகைய அனுமானங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கல்களுக்கு ஆளாகி வரும் அதானி குழுமம், அவர்களது தணிக்கை அறிக்கையில் சுயதீனமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என அதானி குழுமம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுவும் பொய்யா?

இதுவும் பொய்யா?

கிராண்ட் தோர்டன் நிறுவனமும் அதானி குழுமத்திற்கு என நியமிக்கப்பட்டதாகவும், இது ரகசியமான ஒன்றாகவும் உள்ளதாகவும், ஆக இதனை யார் மீண்டும் ஆய்வு செய்யப்போகிறார்கள் என்பது குறித்தான தகவல்களும் ரகசியமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் அதானி குழுமமோ, கிராண்ட் தோடர்னோ இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. தற்போது இது பொய்யான தகவல் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+