அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைக்கு மத்தியில், அதானி குழுமங்கள் கடந்த சில வாரங்களாக கடும் வீழ்ச்சியினை சந்தித்து, சமீபத்திய நாட்களாக மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது.
எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் என்பது இதுவரையில் குறைந்தபாடாக இல்லை என்றே கூறலாம்.
குறிப்பாக எஸ்பிஐ, எல்ஐசி உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது குறித்து, மிகப்பெரிய அச்சம் இருந்து வருகின்றது.
பொதுத்துறை நிறுவனங்கள் விளக்கம்
இது குறித்து எஸ்பிஐ, எல்ஐசி உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் விளக்கம் கொடுத்திருந்தாலும், பரவலாக இது குறித்தான அச்சம் மட்டும் மக்கள் மத்தியில் மறையவில்லை.
மேற்கண்ட நிறுவனங்களில் சாமானியர்கள் செய்த முதலீடு குறித்த அச்சம் என்பது தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்த முதலீடுகள் என்னவாகும்? அவற்றின் தற்போதைய நிலை என்ன? என்று பல தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைகள்
கெளதம் அதானியின் தலைமையிலான அதானி எண்டர்பிரைசஸ் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரும் சரிவினைக் கண்டது. இது இந்த நிறுவத்தின் கடன் விகிதம், முதலீடு என பலவும் பல கேள்விகளை எழுப்பின.
இப்படி பற்பல பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் மத்தியில் தான் பொதுத்துறை நிறுவனங்களான எஸ்பிஐ, எல்ஐசி-யின் முதலீடுகள் குறித்து மிகப்பெரிய அளவிலான அச்சம் என்பது இருந்து வருகின்றது.
லாபத்தில் எல்ஐசி
குறிப்பாக எல்ஐசி பாலிசி ஹோல்டர்களும், எஸ்பிஐ-யின் முதலீட்டாளர்களும் தங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.
இது குறித்து நிபுணர்கள் அதானி குழுமத்தின் கடும் விற்பனைக்கு மத்தியில் எஸ்பிஐ, எல்ஐசி முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதில் எல்ஐசி தனது முதலீட்டின் மூலம் 30,000 கோடி ரூபாய் லாபத்தில் உள்ளது.
எஸ்பிஐ நிலைப்பாடும் இப்படி தான்?
ஆக அதானி குழுமத்தின் மீதான சர்ச்சையே இருந்தாலும் எல்ஐசி பாதுகாப்பாகத் தான் உள்ளது. இதே எஸ்பிஐ-யும் பாதுகாப்பாக தான் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் மொத்த கடன் புத்தகத்தில் எஸ்பிஐ-யின் பங்கு 0.90% ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இது முதலீட்டாளர்கள் அச்சப்பட தேவையில்லை. அதற்காக சரியான காரணமும் இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.
எஸ்பிஐ & எல்ஐசி-யின் நிலை
தற்போதைய விதிகளின் படி, அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு எதிராக தன்னை நிலை நிறுத்தாவிட்டால், 9 - 10 மாதங்களில் கடனை மீட்க வேண்டிய நிலை வரும் என்றும் எச்சரித்துள்ளது.
எல்ஐசி-யின் கையில் தற்போது 26,000 கோடி கையிருப்பு உள்ளது. உரிமை கோரப்படாத தொகையாக 21,000 கோடி ரூபாய் உள்ளது. ஆக அதானி குழும பங்குகளில் எல்ஐசி-யின் முதலீடு என்பது ஜீரோ ஆனாலும் கூட, அவர்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து முதலீட்டாளர்களுகு திரும்ப செலுத்த முடியும். ஆக முதலீட்டாளர்கள் இது குறித்து கவலைப்பட வேண்டிய அச்சம் என்பது தற்போதைக்கு இல்லை, என்பதையே நிபுணர்கள் இதன் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர் எனலாம்.


Click it and Unblock the Notifications