அணு ஆற்றல் துறையில் தனியார் துறை முதலீட்டுக்கு திறந்து விட மத்திய அரசு SHANTI மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் இத்துறையில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக் அதானி குழுமம் தனது பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.
அதானி குழுமம் உத்தரப் பிரதேசத்தில் கமர்சியல் நியூக்ளியர் பவர் திட்டம் அமைக்க அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது உறுதியானால் இந்தியாவின் அணு ஆற்றல் துறையில் தனியார் நிறுவனங்களின் முதல் பெரிய என்டரியாக அதானி குழுமம் திகழும்.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல்படி, அதானி குழுமம் ஸ்மால் மாடுலர் ரியாக்டர்கள் (SMR) எனப்படும் சிறிய அளவிலான அணு உலைகளை எட்டு அமைக்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொன்றும் 200 மெகாவாட் திறன் கொண்டது. இதன் மூலம் மொத்தம் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மால் மாடுலர் ரியாக்டர்கள் என்பது இயல்பான அணு உலைகளை காட்டிலும் மிகவும் சிறியவை. இவை ஒரு தொழிற்சாலை அமைக்கும் இடத்தில் அமைத்துவிடலம், அதேபோல் செலவு குறைவு, விரைவாக கட்டுமானம் செய்ய முடியும். ஆனால் இத்தகைய அணு உலைகளை அமைக்க ஆறு அருகில் இடம் தேவை, காரணம் அணு உலைகளுக்கு 24 மணிநேரமும் தண்ணீர் தேவைப்படும்.
இந்த அணு உலைகளை அமைக்க உத்தரப் பிரதேசத்தில் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. இந்த திட்டம் அதானி குழுமத்தின் கிளீன் எனர்ஜி துறையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அமையும்.

அதானி குழுமம் ஏற்கனவே சோலார், காற்றாலை, மின்சாரம் பரிமாற்றத்தில் வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணு ஆற்றலில் நுழைவது நிறுவனத்தை வலுப்படுத்தும். இந்தியாவில் மின்சார தேவை வேகமாக உயர்ந்து வருகிறது, குறிப்பாக டேட்டா சென்டர்கள், AI அமைப்புகள், நகர விரிவாக்கம் காரணமாக மின்சார தேவை அதிகம் தேவை, இதேபோல் இந்த மின்சாரம் உற்பத்தி செலவு குறைவாக இருக்க வேண்டியது கட்டாயம்.
மேலும் இந்த தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி போன்ற புதைபொருள் ஆற்றலை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு மாற்றாக தான் அணு ஆற்றல் முயற்சிகள் சாந்தி மசோதா மூலம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தனது பட்ஜெட் தாக்கலில் நியூக்ளியர் எனர்ஜி மிஷன் அறிவிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக சிறிய மாடுலர் ரியாக்டர்களின் ஆராய்ச்சிக்கு ரூ.200 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தான் சாந்தி மசோதா நாடாளுமனறத்தில் ஒப்புதல் பெற்று தனியார் முதலீட்டுக்கு வழிவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 214 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் டாடா, ரிலையன்ஸ், JSW போன்ற குழுமங்களும் அணு ஆற்றல் துறையில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அதானி குழுமம், உத்தர பிரதேச அரசு மத்தியிலான பேச்சுவார்த்தை குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை, இப்பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் இந்திய அணு சத்தி துறையின் வளர்ச்சிக்கு புதிய துவக்கப்புள்ளியாக அமையும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications