இந்தியாவின் 2வது பெரும் பணக்காராக இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், துபாய் தலைமையிடமாக கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான ஈமார் ப்ராபர்ட்டீஸின் இந்திய கிளை நிறுவனமான ஈமார் இந்தியாவை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி குழுமத்தின் மீது அமெரிக்க SEC அமைப்பு வழக்கு தொடுத்ததில் இருந்து தனது செயல்பாடுகளை பெரிய அளவில் மாற்றியுள்ளது. எப்போதும் போட்டி நிறுவனங்களை வாங்கி குவிக்கும் அதானி, சமீபத்தில் அதானி வில்மார் நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வெளியேற முடிவு செய்த பங்குகளை விற்பனை செய்துள்ளது.

இதை தொடர்ந்து நாட்டின் உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், சாலை திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு ஏற்றார் போல் நேற்று நடந்த ஏலத்தில் தமிழ்நாட்டில் 124 கிமீ சாலை திட்டத்தை 1600 கோடி ரூபாய்க்கு வென்றது. தற்போது ஈமார் இந்தியா நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தம் வெற்றிப்பெற்றால் ஈமார் இந்தியா நிறுவனத்தில் அதானி குழுமம் 70 முதல் 100 சதவீதம் வரையிலான பங்குகளை கையகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை இருக்கலாம் என தெரிகிறது. இந்த பங்குகளை அதானி குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான அதானி ரியால்டி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்தால் அதானி குழுமத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக இது இருக்கும்.
ஈமார் இந்தியா நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் எம்.ஜி.எஃப் டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பிரிந்த பின்னர், டெல்லி-என்சிஆர், மொஹாலி, லக்னோ, இந்தூர், ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் ஆடம்பர குடியிருப்பு வீடுகள் மற்றும் கமர்சியல் ஸ்பேஸ் சொத்துக்களை உருவாக்கியது.
இதில் முக்கியமாக ஈமார் எமரால்டு ஹில்ஸ், ஈமார் டிகி ஹோம்ஸ், ஈமார் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் 83 போன்றவை நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க திட்டங்களாக விளங்குகிறது. சமீபத்தில், குர்கிராம்-ல் ரூ.1,000 கோடி முதலீட்டில் ஆடம்பர குடியிருப்பு திட்டமான அமரிஸ் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
2024 ஆம் ஆண்டில் ஈமார் இந்தியாவின் மொத்த வருவாய் ரூ.2,756.6 கோடியை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டின் ரூ.1,765.8 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகும்.
அதானி குழுமத்தின் முக்கிய துணை நிறுவனமான அதானி ரியால்டி சமீபத்திய ஆண்டுகளில் தனது ரியல் எஸ்டேட் துறையில் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. மும்பை, புனே, அகமதாபாத், டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சொத்துக்களை கைப்பற்றி விரிவாக்கம் செய்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications