கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. உள்கட்டமைப்பு, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகங்கள் போன்ற துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்படும் என்று குழுமத் தலைவர் கௌதம் அதானி அறிவித்துள்ளார்.
"இந்தியாவின் முதலீட்டுச் சாத்தியம் அளப்பரியது. அடுத்த ஆறு ஆண்டுகளில் ரூ 10 முதல் ரூ 12 லட்சம் கோடி வரை முதலீடு செய்வோம்” என அதானி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற இலக்குடன் இந்த முதலீடுகளை, அவர் "புதிய சுதந்திரம்" என கூறியுள்ளார்.

"தற்சார்புக்கான போராட்டம் தொடர்கிறது. பிரதமரின் இந்த அழைப்பு ஒரு புதிய சுதந்திரம்; இதற்காகவே ஒவ்வொரு தொழிலதிபரும், குழுமமும் உழைக்கிறது" என்று அதானி கூறியுள்ளார். ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அதானியின் முதலீட்டுத் திட்டங்களில் தொழில்நுட்பம், எரிசக்தி மாற்றம், துறைமுகங்களும் அடங்கும். தங்கள் குழுமம் உலகின் வேகமாக வளரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்களில் ஒன்றாகும். அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியாவின் இலக்குகளுக்கு ஏற்ப விரிவாக்கத்தைத் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத்தின் கவ்டா பகுதியில், அதானி குழுமம் 520 சதுர கி.மீ பரப்பளவில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காவை உருவாக்குகிறது. 2030க்குள் இது முழுத் திறனை எட்டும்போது, 30 GW பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும். ஆண்டுக்கு 60 மில்லியனுக்கும் மேலான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் இதற்கு உண்டு.
குழுமம் சுரங்கத் தொழில், பொருட்கள் பிரிவுகளையும் விரிவுபடுத்துகிறது. பசுமை மாற்றத்திற்கான உலோகங்கள், தயாரிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் இறையாண்மை, இயற்கை வளங்கள் மற்றும் ஆற்றல் கட்டுப்பாட்டையே சார்ந்துள்ளது என அதானி வலியுறுத்தினார்.
உலகளாவிய பசுமை ஆற்றல் மாற்றம், வரவிருக்கும் பத்தாண்டுகளில் பல டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான மிகப்பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. இது மின்சாரம் சார்ந்த உற்பத்தி, பசுமை எஃகு, பசுமை உரங்கள், ஹைட்ரஜன் சூழல் அமைப்புகள் மற்றும் AI, டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கான முக்கிய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என விளக்கப்பட்டது.
அதானி குழுமம் 11 பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட அமைப்பாகும் . 62 வயதாகும் கௌதம் அதானி, ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோராக, தனது வணிகக் குழுமத்தை $200 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்ட செய்துள்ளார். ஹிண்டன்பெர்க் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்த போதும் அவற்றை எல்லாம் தகர்த்து தொடர்ந்து பல துறைகளில் தொழில்களை விரிவாக்கம் செய்து வருகிறார்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications