அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!

அதானி குழுமத்திலுள்ள பங்குகளானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து, ஹிண்டர்ன்பர்க் குற்றசாட்டின் மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது.

இது அதானி குழுமத்தின் முதலீடு செய்த முதலீட்டாளார்களுக்கும், பங்குதாரர்களுக்கும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கடந்த வாரத்தில் வெளியான இந்த ஹிண்டர்ன்பர்க் அறிக்கையின் மத்தியில் மோசடி குற்றசாட்டுகளை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் இதுவரையில் 5.6 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளன.

29% சந்தை மதிப்பு

29% சந்தை மதிப்பு

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மதிப்புகள் தொடர்ந்து பெரும் வீழ்ச்சி கண்ட நிலையில், இன்று என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அதானி குழும பங்குகள் சில இன்றும் சரிவிலேயே காணப்படுகின்றது. கடந்த ஜனவரி 24 அன்று அதானி குழும பங்குகளின் மதிப்பானது 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது நேற்று 13.63 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. மொத்தத்தில் அதானி குழுமம் கடந்த வாரத்தில் புதன் கிழமை, வெள்ளி கிழமை மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்களிலும் சேர்த்து, அதன் சந்தை மதிப்பில் 29% அல்லது 5.6 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது.

அதானிக்கு பின்னடைவு

அதானிக்கு பின்னடைவு

அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் அறிக்கை வெளியானதை அடுத்து, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இதற்கிடையில் அதானி குழுமப் பங்குகள் மதிப்பு மட்டும் அல்ல, அதானியின் நிகர சொத்தும் மதிப்பும் கடும் வீழ்ச்சியினை சந்தித்தது. இதன் காரணமாக 4வது இடத்தில் இருந்த அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

எவ்வளவு நிகர மதிப்பு?

எவ்வளவு நிகர மதிப்பு?

அதானியின் நிகர சொத்து மதிப்பு 88.2 பில்லியன் டாலராகும். (7.2 லட்சம் கோடி ரூபாயாகும்). ஆசியாவின் பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஒரு சில இடங்களுக்கு மேலாக அதானி உள்ளார். முகேஷ் அம்பானி தற்போது 10வது இடத்தில் உள்ளார்.

அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி

அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி

ஹிண்டர்ன்பர்க்கின் 413 பக்க அறிக்கையில், 88 கேள்விகள் அதானி குழுமத்திடம் கேட்கப்பட்டது. இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டன.

கடந்த மூன்று அமர்வுகளில் ஏசிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 18.5% சரிவினைக் கண்டு, 8103 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16.4% குறைந்து, 64,325 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி & அதானி போர்ட்ஸ்

அதானி கிரீன் எனர்ஜி & அதானி போர்ட்ஸ்

இதே அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 37.9% கடந்த மூன்று நாட்களில் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பானது 1,14,977 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

இதே அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோனுக்கு 21.6% சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக 35,426 கோடி ரூபாய் சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது.

அதானி பவர்&  அதானி டோட்டல் கேஸ்

அதானி பவர்& அதானி டோட்டல் கேஸ்

அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த மூன்று அமர்வுகளில் 14.2% சரிவினைக் கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 15,100 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் அதானி டோட்டல் கேஸ் பங்கும் விலையானது 39.6% சரிவினைக் கண்டுள்ளது.இதன் சந்தை மதிப்பானது அதானி குழுமத்திலேயே அதிகபட்சமாக 1,69,129 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் & அதானி வில்மர்

அதானி டிரான்ஸ்மிஷன் & அதானி வில்மர்

அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது கடந்த மூன்று அமர்வுகளில் 38% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அதன் சந்தை மதிப்பானது 1,16,686 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 3 அமர்வுகளில் 14.3% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அதன் சந்தை மதிப்பானது 10,618 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது

அம்புஜா சிமெண்ட்ஸ் & என்டிடிவி

அம்புஜா சிமெண்ட்ஸ் & என்டிடிவி

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலையானது கடந்த மூன்று அமர்வுகளில் 22.3% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அதன் சந்தை மதிப்பானது 22,061 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

இதே எண்டிடிவி பங்கின் விலையானது கடந்த மூன்று அமர்வுகளில் 14.2% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அதன் சந்தை மதிப்பானது 260 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் எஃப்பிஓ நிலைமை

அதானி எண்டர்பிரைசஸ் எஃப்பிஓ நிலைமை

அதானி குழுமட்தின் 20,000 கோடி ரூபாய் மதிப்பில்லான உரிமை பங்கு வெளியீட்டில் 2 நாட்களில் வெறும் 3% மட்டுமே சந்தாதாரர்களை கவர்ந்துள்ளது.

எனினும் இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவெனில் அபுதாபி நிறுவனமான ஐஹெச்சி நிறுவனம் அதானி குழுமத்தில் 3200 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+