ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் நிரம்பிய அறிக்கைகள் பாதிப்பில் இருந்து அதானி குழுமம் இன்னும் மிள முடியாமல் இருக்கும் வேளையில், முதலீட்டளர்கள் நம்பிக்கையை பெற கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் கடன் அளவை குறைப்பதில் இருந்து பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்படி அதானி குழுமம் ஜனவரி 24 முதல் சுமார் 2.15 பில்லியன் டாலர் அளவிலான கடன் அளவை குறைத்துள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இது பொய் என தி கென் அறிக்கை வெளியிட்டது. இந்த செய்தி வெளிவந்த நாளில் இருந்து அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 4 பில்லியன் டாலர் அளவில் குறைந்துள்ளது.
செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் 10 நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று அதானி குழும பங்குகளின் நிலைமை என்ன..?
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஜனவரி 24 முதல் அதாவது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பின்பு அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதில் முக்கியமானதாக விளங்கியது அதீத கடன் அளவு. இதை வேகமாக சரி செய்ய கௌதம் அதானி முடிவு செய்தார்.
கௌதம் அதானி
இதற்காக கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம், அதானி குழும பங்குகளை அடமானமாக வைத்து வங்கிய கடனில் சுமார் 2.15 பில்லியன் டாலர் தொகையை திரும்ப செலுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை அதானி குழுமத்திடம் இருந்தும் வெளியானது.
அதானி குழும கடன்
இதற்கிடையில் அதானி குழுமம் திருப்பி செலுத்தப்பட்டதாக கூறப்படும் 2.15 பில்லியன் டாலர் தொகைக்கு இணையாக பங்குகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என தி கென் தனது குறிப்பில் தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல், அதானி குழுமம் இக்குறிப்பிட்ட தொகையில் பாதி அளவு மட்டுமே செலுத்தியுள்ளதும், அதற்கான பங்குகள் மட்டுமே வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
பாதி கடன் மட்டும்
இதோடு அதானி குழுமம், பங்குகள் அடிப்படையிலான கடன் மீது வங்கி மற்றும் நிதியமைப்புகள் இருந்து கூடுதல் நடவடிக்கை அல்லது கூடுதல் பங்குகளை பிணையமாக வைப்பதை தவிர்க்கும் அளவுக்கு மட்டுமே கடனை அடைந்துள்ளதாகவும் தி கென் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்து. ஆனால் 2.15 பில்லியன் டாலர் அளவிலான கடனை திரும்பி தெலுத்தியுள்ளாத பொது சந்தைக்கு தவறான தகவலை அளித்துள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது.
4 பில்லியன் டாலர்
இந்த செய்தி வெளியான அடுத்த நாளில் இருந்து பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 பங்குகளும் சரிவை சந்தித்த நிலையில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 4 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது.
அதானி குழும பங்குகள்
இந்த நிலையில் புதன்கிழமை முடிவில் அதானி குழுமத்தின் டாப் 10 நிறுவனக்களின் பங்கு மதிப்பு
அதானி எண்டர்பிரைசஸ் - 8.75 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 7.25 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.98 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 1.33 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 4.45 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 4.28 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 0.78 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.52 சதவீத உயர்வு
NDTV - 4.99 சதவீதம் உயர்வு
ஜுகேஷிந்தர் ராபி சிங்
தி கென் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அதானி குழுமத்தின் நிதித் தலைவர் ஜுகேஷிந்தர் ராபி சிங் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அடுத்த காலாண்டு முடிவுகள் வெளியாகும்போது, இதெல்லாம் வேண்டுமென்றே செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அனைவரும் அறிவார்கள் என பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications