அதானி குழுமம் பங்கு கையிருப்பிலும், பங்கு விலையை முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக உயர்த்தி முதலீட்டாளர்களை ஏமாற்றியும், இந்திய சட்ட விதிகளை மீறியதாகவும் பல்வேறு ஹிண்டன்பர்க், OCCRP குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் மூலம் பெரிய அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்த அதானி குழுமம் அடுத்தடுத்த மறுசீரமைப்பு, புதிய முதலீடு செய்தது, முதலீட்டை திரட்டியது, பல்வேறு கடன் தவணைகளை மறுசீரமைப்பு செய்தது என அனைத்தும் அதானி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

இதன் வாயிலாக அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதனம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தாண்டியது, இது உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து நிலையான முதலீட்டால் நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது.
துறைமுகங்கள் முதல் மின்சாரம் வரையிலான வர்த்தக கட்டமைப்பை கொண்டு இருக்கும் அதானி குழுமம், வெள்ளியன்று அதன் சந்தை மதிப்பீட்டில் 7,039 கோடி ரூபாயைச் சேர்த்தது, இதன் மூலம் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பை 11.02 டிரில்லியன் அதாவது 11.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இது வியாழக்கிழமை 10.96 டிரில்லியன் ரூபாயாக இருந்தது.
மார்ச் 2023 தொடக்கத்தில் இருந்து, அதானி குழுமப் பங்குகள், ஹிண்டன்பர்க்கிற்குப் பிந்தைய வீழ்ச்சியிலிருந்து கணிசமாக மீண்டு, கிட்டத்தட்ட 5 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தை சேர்ந்துள்ள தொகையைச் சேர்த்துள்ளன.
அதானி குழுமத்தின் முக்கியமான வர்த்தக முடிவுகள், நிதி திரட்டுவதற்கான முன்முயற்சிகள் மற்றும் எரிசக்திக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் வணிகங்களில் வளர்ச்சியைத் தொடர்ந்து செயல்படுத்தியதன் மூலம், அதானி பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்தது


Click it and Unblock the Notifications