அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் சற்று ஏற்றத்தினை கண்டுள்ளது. இதன் காரணமாக அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு 39,000 கோடி ரூபாய் அதிகரித்து, 7.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், கடந்த அமர்வில் சந்தை மதிப்பானது 30,000 கோடி ரூபாய் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டது.
நல்ல விஷயம்
அதானி குழுமம் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அதோடு நிறுவனம் 800 மில்லியன் டாலர் கடன் வசதிக்காகவும் உறுதியான உறுதிபாட்டையும் பெற்றுள்ளதாக தெரிகின்றது. இது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 750 மில்லியன் டாலர் எனும் அளவிலான கடனை திரும்ப செலுத்த அளிக்கப்படலாம் என தெரிகிறது. ஆக இது நிறுவனத்தின் பங்கு விலைகள் ஏற்றம் காண காரணமாக அமைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பங்கு விலையானது 10% அதிகரித்து, 1500 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இதன் சந்தை மூலதனம் 1,71,051 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த செவ்வாய்க்கிழமையன்று 1,55,502 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15,549.62 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
நீண்டகால வளர்ச்சிக்கு பயன்
பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், சில வணிக விரிவாக்கங்களையும் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்காக பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இதன் வணிக விரிவாக்கத்திற்கு உதவும் எனலாம்.
அதானி போர்ட்ஸ்
இதேபோல இந்த நெருக்கடி நிலைக்கு மத்தியில் அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது. அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இதுவரையில் 4277 கோடி ரூபாய் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,32,286.91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 1,28,010 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கு விலையானது 2.56% உயர்ந்து, 607.75 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இது அதிகபட்சமாக 615.85 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
இதே அதானி கிரீன் எனர்ஜி குழுமத்தின் சந்தை மூலதனம் 3841 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது 800 மில்லியன் டாலர் கடன் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில் வந்துள்ளது. இது அதன் கடனை திரும்ப செலுத்த அதானி குழுமத்திற்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி டோட்டல் கேஸ்
இதே அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது இதுவரையில் அதிகபட்சமாக 714.20 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக 74,809.08 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பானது, 78,548.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3580.73 கோடி ரூபாய் அதிகரித்து, 75,256.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலையானது 2.40% அதிகரித்து, 658 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மற்ற நிறுவனங்களின் நிலை என்ன?
அதானி பவர், அதானி வில்மர் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனகள் 2000 - 3000 கோடி ரூபாய் வரையிலான சந்தை மதிப்பினை சேர்த்துள்ளன.
இதற்கிடையில் அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த செவ்வாய்கிழமையன்று 5% அதிகரித்தும், இதே இன்று 4.98% அதிகரித்து, 153.75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே அதானி வில்மரின் பங்கு விலையானது 5% அதிகரித்து, 379.45 ரூபாயாகவும், இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 2.06% அதிகரித்து, 604.80 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications