அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக செபி விசாரணை செய்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் வேளையில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தை சரி செய்யும் விதிமாக அதானி குழுமம் முன்கூட்டியே முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
செபி விசாரணையில் சில முக்கியமான விஷயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அதற்காக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணையின் மூலம் இது வெளிச்சத்திற்கு வர உள்ளது. இந்த நிலையில் அதானி குழுமம் ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து புதிதாக ஒரு நிறுவனத்தை துவங்க உள்ளதாக தெரிகிறது.

அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அதானி குளோபல், சிங்கப்பூர் நாட்டின் கோவா ஹோல்டிங்க்ஸ் ஏசியா நிறுவனத்துடன் 50:50 பங்கு கூட்டணியில் புதிதாக ஒரு நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த புதிய கூட்டணி நிறுவனம் அதானி குழுமம் தயாரிக்கும் கிரீன் அமோனியா, கிரீன் ஹைட்ரஜென் மற்றும் அதன் பிற உற்பத்தி பொருட்களை விற்பனை மற்றும் மார்கெட்டிங் செய்வதற்காக திறக்கப்பட்டு உள்ளது.
அதானி குளோபல் மற்றும் கோவா ஹோல்டிங்க்ஸ் ஏசியா கூட்டணி நிறுவனம் ஜப்பான், தைவான், ஹவாய் ஆகிய சந்தைகளின் வர்த்தகத்தை கைப்பற்றுவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது. கோவா ஹோல்டிங்க்ஸ் ஏசியா உடன் நீண்ட காலமாக மார்கெட்டிங் மற்றும் வர்த்தக உறவுகளை வைத்துக்கொண்டுள்ள அதானி குழுமத்திற்கு இது அடுத்தக்கட்ட வர்த்தக மேம்பாடாகும்.
அதானி குழுமம் கிரீன் ஹைட்ரஜென் மற்றும் அதன் பிற முக்கிய உற்பத்திக்காக உருவாக்கப்பட்டது தான் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனம் முதல் கட்டமாக குஜராத்தில் வருடத்திற்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கிரீன் ஹைட்ரஜென் தயாரிப்பதற்கான தளத்தை அமைத்து வருகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்ட உற்பத்தி பணிகள் 2027 ஆம் நிதியாண்டின் முதல் துவங்கும், சந்தையின் டிமாண்ட் மற்றும் வர்த்தக அளவை பொறுத்து அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அடுத்த 10 வருடத்தில் 3 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்த உள்ளது. இதற்காக மட்டுமே கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது.

அதானி குழுமத்தின் குஜராத் ஹைட்ரஜன் திட்டத்தின் 3 விஷயங்கள் மையமாக வைத்து உற்பத்தி செய்யப்பட உள்ளது. 1. கிரீன் ஹைட்ரஜன், 2. கிரீன் அமோனியா, கிரீன் மெத்தனால், நிலையான பசுமை விமான எரிபொருள் ஆகியவை.. 3. சப்ளை செயின் பொருட்களின் உற்பத்தி அதாவது சோலார் பாலிசிலிக்கான், இன்காட், ஃவேபர், சென் மற்றும் மாடியூல், கற்றாலை டர்பைன் ஜெனரேட்டர் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தையும் அதானி குளோபல் மற்றும் கோவா ஹோல்டிங்க்ஸ் ஏசியா கூட்டணி நிறுவனத்தின் வாயிலாக ஜப்பான், தைவான், ஹவாய் ஆகிய சந்தைகளில் விற்பனை செய்யவே இக்கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications